2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மல்வானையில் சுபர் கே நிறுவனத்தின் எட்டாவது கிளை

Kogilavani   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.எச்.எம்.பௌஸான்)

சுபர் கே (super k) நிறுவனத்தின் எட்டாவது கிளை இன்று காலை பியகம மல்வானை வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு எதிர்பக்கமாக பல முன்னணி வங்கிகளுக்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்நிறுவனம் இப் பகுதியில் திறந்து வைக்கப்படுகின்ற முன்னணி சுப்பர்மாக்கட் தொகுதிகளில் முதல் இடத்தை பெறுகின்றது.

பல்லாயிரக்கணக்கான வர்த்தக வலயத் தொழிலாளர்களையும் ஈர்க்கும் வகையில் பல்வேறு பொருட்களுக்கும் விலைக்கழிவுகள் வழங்கப்படவுள்ளதாகவும் இப்பகுதி முஸ்லிம்கள் நலன்கருதி ஹலால்  உற்பத்திகளை (இறைச்சி வகைகள்)  மாத்திரம் தாம் விற்பனை செய்யவுள்ளதாகவும் இதன் நிறைவேற்று முகாமையாளர் சமந்த செனவிரத்ன தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .