2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை தேயிலையை சர்வதேச சந்தையில் பிரபல்யப்படுத்த முறையான பங்காளர் கிட்டவில்லை

A.P.Mathan   / 2013 ஜனவரி 07 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இலங்கை தேயிலை குறித்த சர்வதேச பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இதுவரையில் முறையான விளம்பர பங்காளர் நிறுவனம் இனங்காணப்படவில்லையென இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கென கடந்த ஆண்டு சர்வதேச தொடர்புகளை பேணும் இலங்கையை சேர்ந்த நான்கு விளம்பர நிறுவனங்கள் மொத்தமாக விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்த 10 நிறுவனங்களிலிருந்து தெரிவாகியிருந்தன. ஆயினும் இந்த நிறுவனங்களின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த யுக்திகள் எவையும் தமக்கு போதுமானதாக அமையவில்லை எனவும் இலங்கை தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.

எனவே 2012ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டிய இலங்கை தேயிலை குறித்த சர்வதேச பிரசார நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாமல் முடங்கிக்கிடப்பதுடன், அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பதும் குறித்தும் தெளிவற்ற ஒரு நிலைப்பாட்டை இலங்கை தேயிலை சபை கொண்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது. ஆயினும் மீண்டும் இந்த பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய விண்ணப்பங்களை விளம்பர நிறுவனங்களிடமிருந்து கோரும் நிலை ஏற்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .