2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

வைப்பிலிடும் பணத்தை இரட்டிப்பாக்கும் சிறுவர் சேமிப்புக் கணக்கு

A.P.Mathan   / 2013 ஜனவரி 11 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொமர்ஷல் கிரெடிட் நிறுவனமானது சிறுவர்களுக்கான தனிச்சிறப்புமிக்க 'ஹரி' (Hari) எனும் சேமிப்புக் கணக்கினை அறிமுகப்படுத்தி வைப்பதன் மூலம், சிறுவர் சேமிப்புக் கணக்கு தொடர்பான தொனிப்பொருளில் புரட்சிகரமான மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 'ஹரி' சிறுவர் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சமானது, ஒவ்வொரு தடவையும் முதலை வைப்பிலிடும் போது அதற்கு சமனான முதல் கொமர்ஷல் கிரெடிட் மூலம் வழங்கப்படுவதோடு, வயதெல்லைகளுக்கேற்ப இது வேறுபடும். அத்தோடு  கொமர்ஷல் கிரெடிட்டின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு அதிகமான அனுகூலங்களை வழங்குவதன் மூலம் சேமிப்புக் கணக்குகளில் இருந்து கிடைக்கப் பெறும் அனுகூலங்களை புதியதொரு மட்டத்திற்கு இந்நிறுவனம் கொண்டு செல்கின்றது.

கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷான் எகொடகே கூறுகையில், 'நாம் மிக விரைவில் புத்தம் புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ள நிலையில், நாளை வளர்ந்தோராக திகழவுள்ள இன்றைய சிறுவர்களுக்கு இவ்வாறான சேவையை வழங்க முடிவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். 'ஹரி' சிறுவர் சேமிப்புக் கணக்கானது, ஒருவரது சிறு பராயத்திலிருந்து அவர் 18 வயதை அடையும் வரைக்குமான காலப்பகுதி முழுவதும் சாத்தியமானளவுக்கு மிகவுயர்ந்த வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய கணக்காக காணப்படுகின்றது. இது மிகக் கவர்ச்சிகரமான ஒரு முன்மொழிவாக அமையும் அதேநேரம், இதன்மூலம் இந்த நாட்டிலுள்ள பெற்றோர்களும் பிள்ளைகளும் மிகவுன்னத அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வர்' என்றார்.

புதிதாகப் பிறக்கும் எந்தவொரு குழந்தைக்காகவும், ஆரம்ப வைப்பாக ரூபா 250 ஐ வைப்புச் செய்து இந்த 'ஹரி' சிறுவர் சேமிப்புக் கணக்கை திறக்க முடியும். இக்கணக்கு அவன் அல்லது அவள் 18 வயதை அடையும் வரைக்கும் செயற்படு நிலையிலிருக்கும். அனைத்து வட்டிக் கொடுப்பனவுகளும் மாதந்தோறும் கணக்கிடப்படுவதுடன், கணக்கில் மாதாந்த அடிப்படையில் வரவு வைக்கப்படும்.

 '2012ஆனது கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்திற்கு மிக முக்கியத்துவமிக்கதொரு ஆண்டாக அமைந்திருந்தது. பெருமளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை எம்மிடம் கொண்டுவந்து சேர்த்த வருடமாக அது திகழ்கின்றது. நாடெங்கும் எமது சேவை நிலையங்களை மேலும் விஸ்தரிப்பதற்கும் அதேபோன்று எமது சொந்த வர்த்தகக் குறியீட்டிலான சேவைகள் மற்றும் கூட்டாண்மைத் தலைமைத்துவம் போன்றவற்றை வழங்குவதற்குமான எமது முன்னெடுப்புக்கு இது தூண்டுதலையும் புத்துணர்வையும் அளித்துள்ளது' என்று கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷான் எகொடகே தெரிவித்தார்.

  Comments - 0

  • sangar Saturday, 19 January 2013 10:52 AM

    நல்ல திட்டம் வரவேற்கத்தக்கது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .