2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை ஆரம்பம்

Super User   / 2013 ஜனவரி 16 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2013 எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. நான்காவது தடவையாக நடைபெறும் இந்த கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதுல் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தை ஒரு அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, இலங்கை வர்த்தக சங்கங்களின் சம்மேளனம், யாழ் வர்த்தக சம்மேளனம், யாழ் மாநகர சபை இலங்கை மகாநாடுகள் பணியகம் மற்றும் யாழ் இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த கண்காட்சியினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பல கலந்துகொள்ளவுள்ளதுடன் தொழில் பயிற்சி நெறிகளையும் வழங்கவுள்ளது.

இந்த கண்காட்சி மூலம் முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குனர்கள், வர்த்தக துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை எற்படும் யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் கே. பூரணச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2013 தொடர்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .