2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

பிரதம நீதியரசர் நியமனம சர்ச்சையால் கொழும்பு பங்குச் சந்தையில் தாக்கமில்லை

A.P.Mathan   / 2013 ஜனவரி 17 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.சேகர்

நாட்டின் பிரதம நீதியரசர் நியமனம் குறித்து தொடர்ச்சியாக நிலவி வந்த சர்ச்சைக்கு மத்தியில் பல்வேறு தரப்புகளிலிருந்து நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதகமான சூழ்நிலை எழும் எனும் கருத்து பரவலாக முன்மொழியப்பட்டிருந்த போதிலும், கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில், இந்த செயற்பாடு எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.

குறிப்பாக நேற்று முன்தினம் மாலை முன்னாள் பிரதம நீதியரசர் தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறியிருந்தமையை தொடர்ந்து, நேற்றைய தினம் பங்குச்சந்தை நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன. இதன் போது, பரவலாக அனைவரும் சந்தை நடவடிக்கைகள் மந்தமடையும் என எதிர்பார்த்த போதிலும், அந்த எதிர்பார்ப்புகளை தகர்க்கும் வகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. அத்துடன், உள்நாட்டை சேர்ந்த சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடும் சந்தையில் பரவலாக அவதானிக்க முடிந்தது.

இதனை தொடர்ந்து, நேற்றைய தினம் பங்கு கொடுக்கல் வாங்கல்கள் நிறைவடையும் பொழுது, பிரதான சுட்டெண்ணான அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 5800 புள்ளிகளை கடந்து நிறைவடைந்திருந்தது. கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 5800 புள்ளிகளை கடந்திருந்தமை இதுவே முதல் தடவையாகும்.

ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதில் முதலீட்டாளர்கள் அதிகளவு ஆர்வத்தை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .