2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச ஆடைகளை கண்டிக்கு கொண்டுவரும் ஹமீடியா

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 03 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை நிறுவனமான ஹமீடியா, கண்டி சிற்றி சென்டரில் 'பிளனட் ஃபெஷன் மற்றும் ரேமன்ட்'ஐ திறந்ததன் மூலம், சர்வதேச ஆடைகளை கண்டிக்கு எடுத்துச் சென்றுள்ளது.

கண்டி சிட்டி சென்டரின் மூன்றாம் மாடியில் 1200 சதுர மீட்டரில் அமைந்துள்ள பிளனட் ஃபெஷன் மற்றும் ரேமன்ட், கண்டி மாநகர முதல்வர் மஹேன் ரத்வத்தையினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. KCCஇன் 3ஆம் தளமானது 'ஃபெஷன் மற்றும் அணிகலன்களுக்கான தளமாக' உத்தியோகபூவமற்று விளங்குகின்றதுடன், தினசரி நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் இத்தளத்துக்கு விஜயம் செய்கின்றனர்.

ஃபௌசுல் ஹமீட் தெரிவிக்கையில், 'முதலாவது பிளனட் ஃபெஷன் மற்றும் ரேமன்ட் குதிரைப்பந்தய திடல் நடைபாதையில் கடந்த ஒக்டோபரில் திறந்து வைக்கப்பட்டதுடன், இதுவரை சாதனையான விற்பனையையும் கண்டுள்ளது. உலகின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தகக் குறியீடுகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் பிளனட் ஃபெஷன், மலையக தலைநகரில் முக்கிய இடங்களுள் ஒன்றாக மாறியுள்ள கண்டி சிட்டி சென்டரில் தனது கதவுகளை திறந்ததையிட்டு பெருமையடைகின்றது'.

உலகின் மிகச் சிறந்த தைக்கப்பட்ட ஆடைகளை 'பிளானட் ஃபெஷன்' இலங்கை மக்களுக்கு கொண்டு வருகின்றது. ஆடைகள் வைக்கப்பட்டுள்ள இறாக்கைகளுக்கு அழகூட்டுகின்ற உலகின் மிகவுன்னத வர்த்தக குறியீடுகளுள் Louis Philippe, Van Heusen, Allen Solly, Peter England போன்ற குறியீடுகளும் அடங்கும்.

முகாமைத்துவப் பணிப்பாளர் ஃபௌசுல் ஹமீட் தெரிவிக்கையில் 'கண்டி தற்போது சுற்றியுள்ள நகரங்களுக்கான முக்கிய கொள்வனவு ஸ்தலமாக மாறியுள்ளது. பலவருட காலமாக கண்டியிலுள்ள வாடிக்கையாளர்கள் தேசிய மற்றும் சர்வதேச அசல் குறியீடுகளையும் அசல் உடைகளையும் பெற முடியாதவர்களாக உள்ளனர். இந்த வெற்றிடத்தை எம்மால் நிரப்ப முடியுமானதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்' என ஹமீட் மேலும் தெரிவித்தார்.

இன்று, இலங்கையிலுள்ள ஒரேயொரு ஆண்களுக்கான பல் குறியீட்டு நிலையமாக 'பிளனட் ஃபெஷன் மற்றும் ரேமன்ட்' உள்ளது. பரஸ்பரம் இரு தரப்பிற்கும் வெற்றியைத் தரக்கூடிய இந்த வர்த்தக முயற்சியின் பொருட்டு - இந்தியாவின் மிக வேகமாக வளர்ச்சியடைந்துவரும் முத்திரை பதித்த ஆடையுற்பத்திக் கம்பனிகளுள் ஒன்றாகவும், சில்லறை வர்த்தக சந்தையில் முதற்தர நவநாகரிக உற்பத்திசார் நிறுவனமாகவும் செயற்படுகின்ற ஆதித்யா பிர்லா நுவோ லிமிட்டெட்டின் ஒரு பிரிவான மதுரா பெஷன் அன்ட் லைவ்ஸ்டைல் நிறுவனத்துடன் ஹமீடியா நிறுவனம் கைகோர்த்துள்ளது.

Louis Philippe வர்த்தக குறியீடானது ஒரு சக்திமிக்க ஆணின் அந்தஸ்து மற்றும் நாகரிக தன்மை (ஸ்டைல்) என்பவற்றை வெளிப்படுத்துவதாக காணப்படுகின்றது. Louis Philippe ஆடையை அணியும் நபர்; தவறில்லாத ஆடைசார் விருப்பம் மற்றும் பிரிவைச் சேர்ந்த ஆண் எனும் தோற்றப்பாட்டை சந்தேகத்துக்கிடமின்றி கட்டியெழுப்புகின்றது. உலகளவில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் சேர்ட் வர்த்தக குறியீடாக திகழும் Van Heusen ஆனது இன்று 24/7 அடிப்படையில் எந்நேரத்திற்கும் பொருத்தமான வர்த்தக குறியீடாக வளர்ச்சி கண்டுள்ளதுடன் அதன் பொருந்தும் தன்மை, துணி, முடிவாக்கம் மற்றும் புத்தாக்கமான நவநாகரிகம் போன்றவற்றுக்காக பரவலாக அறியப்படுவதுடன், ஆடம்பர வர்த்தக குறியீடுகளிற்கு ஏற்படும் செலவில் சிறிதளவானதாகவும் உள்ளது.

Allen Solly வர்த்தக குறியீடானது, இந்தியாவின் நகர்ப்புற வேலைக்குச் செல்வதற்கான ஆடையை மீள்-வரையறை செய்கின்றது. மாற்றமடைந்து கொண்டிருக்கும் வேலைச் சூழலுக்கு பொருத்தமான ஆடையணியும் போக்கினை உருவாக்குகின்ற Allen Solly பலதரப்பட்ட நிறங்களில் கிடைப்பதுடன் தனது Friday Dressing என்ற தெரிவின்மூலம் தற்போது முன்மாதியாக கிடைக்கின்ற அலுவலக ஆடைகளின் வடிவமைப்பினை முறியடித்துள்ளது.

Peter England ஆனது இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் ஆண்கள் ஆடை வர்த்தக குறியீடாக திகழ்கின்றது. வேலைத் தளத்தில் உன்னதமான தோற்றப்பாட்டினை வெளிப்படுத்த எதிபார்க்கின்ற அதேநேரம் குறைகூற முடியாதளவுக்கு ஆடைத் தெரிவுசார் விருப்பத்தை கொண்டுள்ள, நவீன நாகரிக போக்குகள் தொடர்பில் அக்கறை செலுத்தும் இன்றைய ஆண்களுக்கு ஊக்கமூட்டுகின்ற ஒரு தொடரிலான சம்பிரதாய ஆடைத் தெரிவுகளை இது அளிக்கின்றது. 

'பிளனட் ஃபெஷன் மற்றும் ரேமன்ட் காட்சியறையிலுள்ள அனைத்து வர்த்தக குறியீடுகளும் ஹமீடியா நிறுவனத்திலும் நாடெங்கிலுமுள்ள அதன் அங்கீகாரம்பெற்ற விநியோகஸ்தர்களிடத்திலும் கிடைக்கும்' என சிரேஷ;ட வர்த்தக குறியீட்டு முகாமையாளரான ரிஸ்வான் மஹ்மூத் தெரிவித்தார். 'இலங்கையர் மற்றும் வெளிநாட்டவரை உள்ளடக்கிய கொழும்பு மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பிரதிபலிப்பானது, சிறப்பானதாக காணப்பட்டதுடன், நாடு முழுவதிலுமுள்ள முக்கிய நகரங்களில் இதேமாதிரி தொனிப்பொருளிலான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு எமது சக பிரஜைகளும் இதே அனுபவத்தை பெற்றுக்கொள்ள எமக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது'.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .