2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

சீனாவில் தனியார் துறை முதலீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டுமாம்

A.P.Mathan   / 2013 மார்ச் 05 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் புகையிரதம், வலு மற்றும் நிதி சார் துறைகளில் எதிர்வரும் 5 ஆண்டு காலப்பகுதிக்கு தனியார் துறையினரின் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் என சீனாவின் முன்னணி தீர்மானம் மேற்கொள்ளும் குழுவின் அங்கத்தவரான சாங்க் கவோலி அறிவித்துள்ளார்.

சீனாவை பொறுத்தமட்டில் பொருளாதார நிலை சிறப்பாக காணப்பட்ட போதிலும், இந்த நிலையை தொடர்ந்து எதிர்காலத்திலும் பேணும் வகையில் இது குறித்த முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய தருணம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இவர் அறிவித்திருந்தார்.

சீனாவில் தனியார் துறையின் செயற்பாடுகள் மிகவும் சிறப்பான நிலையில் காணப்படுவதுடன், 4 இல் 3 வேலை வாய்ப்புகள் தனியார் துறையில் நிலவுவதாகவும் அறிவிக்கப்படுகிறது. அத்துடன் அரச துறைக்கு வழங்கப்படும் சலுகை அடிப்படையிலான வங்கி கடன் வசதிகள் போன்றன இந்த தனியார் துறைக்கும் வழங்கப்பட வேண்டியது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .