2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கிளாசிக் ட்ரவல் சேவைகள் இரத்தினபுரி நகருக்கு விஸ்தரிப்பு

A.P.Mathan   / 2013 மார்ச் 05 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமும், IATA அங்கீகாரம் பெற்ற போக்குவரத்து சேவைகளை வழங்கும் இலங்கையின் முன்னணி நிறுவனமான கிளாசிக் ட்ரவல் தனது புதிய கிளை காரியாலயத்தை இல. 127, பிரதான வீதி, இரத்தினபுரி எனும் முகவரியில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. கம்பனிகளுக்கும் விடுமுறைசார் தேவையுடையோருக்கும் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ளும் வகையில் கிளாசிக் ட்ரவல் நிறுவனம் தனது சேவைகளை வழங்கி வருகிறது.

இரத்தினபுரி மாநகர சபையின் மேயர் கபில அபேரத்ன, கிளாசிக் ட்ரவல் நிறுவனத்தின் பணிப்பாளர் சயிஃவ் யூசுஃவ் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேஷ் மென்டிஸ் ஆகியோர் இந்த கிளையை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்திருந்தனர். இந்நிகழ்வில் கிளாசிக் ட்ரவல் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கிளாசிக் ட்ரவல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேஷ் மென்டிஸ் உரையாற்றுகையில், 'இரத்தினங்களின் சொக்கபுரியான இரத்தினபுரி நகரில் எமது புதிய கிளைக்காரியாலயத்தை அங்குரார்ப்பணம் செய்துள்ளமையையிட்டு கிளாசிக் ட்ரவல் நிறுவனத்தை சேர்ந்த நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இரத்தினபுரி நகரில் இதுவரை காலமும் நிலவிய உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து முகவர் சேவை நிலையமொன்று இல்லாமை எனும் குறையை தற்போது கிளாசிக் ட்ரவல் நிவர்த்தி செய்துள்ளதுடன், இந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு வழமை போல எமது உயர் தர சேவைகளை வழங்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்' என்றார்.

இரத்தினபுரி பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு தமது பயண ஒழுங்குகள் குறித்த விபரங்களை இந்த புதிய கிளைக்காரியாலயத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், விமான டிக்கட் பதிவு, உலகளாவிய ரீதியில் ஹோட்டல்கள் முற்பதிவுகள், விசா கையாள்கை சேவைகள், கடவுச்சீட்டு நீடிப்பு சேவைகள், போக்குவரத்து காப்புறுதி சேவைகள், உலகின் எந்தவொரு பகுதிக்குமான விடுமுறை பயண ஏற்பாடுகளையும் கிளாசிக் ட்ரவல் நிறுவன கிளைக்கு விஜயம் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

கிளாசிக் ட்ரவல் நிறுவனத்தின் தலைமையகம் கொழும்பில் அமைந்துள்ளதுடன், கிளைக்காரியாலயங்கள் உலக வர்த்தக மையம், ஹம்பாந்தோட்டை, காலி, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகள் போன்ற பகுதிகளில் அமைந்துள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி கப்பல் பயண சேவை (cruise liner) வழங்குநரான சிங்கப்பூரின் ஸ்டார் குரூசஸ் இன் பரிந்துரைக்கப்படும் விற்பனை முகவராக கிளாசிக் ட்ரவல் இயங்குகிறது, இலங்கையில் பிரதிநிதித்துவம் வகிக்கும் அனைத்து விமான சேவைகளுக்கும் நேரடி முகவராக கிளாசிக் இயங்குவதுடன், அனைத்து முன்னணி விமான சேவைகளினதும் முதல் மூன்று முகவர்களில் ஒன்றாக தரப்படுத்தப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் போக்குவரத்து கட்டமைப்பில் ஹம்பாந்தோட்டை முக்கிய மையமாக விளங்குவதை இனங்கண்ட கிளாசிக் ட்ரவல் நிறுவனத்துக்கு, ஸ்ரீலங்கன் விமானசேவையின் மூலம் ஹம்பாந்தோட்டை நகருக்கான பயணிகள் சேவை முகவர் (PSA) எனும் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.

1994ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கிளாசிக் ட்ரவல், இன்று போக்குவரத்து துறையில் நாட்டின் முன்னணி நிலையில் திகழும் நிறுவனமாக விளங்குகிறது. அங்கீகாரத்தை பெற்ற பயண முகவர் நிறுவனம் என்பதுடன், சிறந்த சேவையை வழங்கின்றமைக்காக பல விருதுகளையும், கௌரவிப்புகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 24 மணி நேர சேவைகளை வழங்கும் ஒரே பயண ஒழுங்குபடுத்தல் நிறுவனம் எனும் வகையில், உலகின் எப்பகுதியிலுமிருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்திடமிருந்து சிறந்த அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .