2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

தகவல் தொழில்நுட்ப சந்தையில் எச் வன் நிறுவனத்தின் புரட்சி

A.P.Mathan   / 2013 மார்ச் 16 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹைட்ராமனி குழுமத்துக்கு சொந்தமான எச் வன் நிறுவனம் மைக்ரோசொப்ட் ஒபிஸ்365 பெக்கேஜ்ஜின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய உற்பத்தியான ஒபிஸ்2013 இலங்கைக்கு முதலில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் LAR பங்குதாரரான எச் வன் நிறுவனம் Office365 செயற்படுத்துவதில்  நாட்டில் முன்னிலை நிறுவனமாக தற்போது விளங்குகின்றது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹேலீஸ், ப்ரவுன் மற்றும் கெப்பிட்டல் மகாராஜா போன்ற மாபெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு தமது சேவையை எச் வன் நிறுவனம் ஏற்கனவே வழங்கியுள்ளது.

'க்ளைவுட்' தொழில்நுட்பத்தை கொண்டு புதிய ஒபிஸ்2013 கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை அதன் சிறப்பம்சமாகும். உலகம் முழுவதும் தற்போது வர்த்தக நிறுவனங்கள் க்ளைவுட் தொழில்நுட்பத்தை கொண்டு செயற்படும் பின்னணியை காணலாம். 

'Office 2013 அமைந்துள்ள அனைத்து சிறப்பம்சங்களும் ஒபிஸ்365 இற்கு புதிய பெறுமதியை கொடுத்துள்ளது. இதன்மூலம் வர்;த்தக நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப பின்னணியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது' என எச் வன் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமத் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஒபிஸ்365 பெரிய நிறுவனங்களுக்கு மாத்திரமல்ல சிறிய நிறுவனங்களுக்கும் சிறந்தது. எமது  குழுவினரின் அர்ப்பணிப்பு, குழு என்ற உணர்வு ஆகியனவும் ஒவ்வொரு நிறுவனம் தொடர்பிலும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறையே எமது வெற்றிக்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார். 

'ஜோன் கீல்ஸ் நிறுவனத்தில் ஒபிஸ்365 செயற்படுத்தும்போது அது மிகவும் பெரிய நடவடிக்கையாக இருந்தது. அந்நிறுவனம் பாரிய நிறுவனம் என்பதுடன் அதில் அநேக ஊழியர்கள் பணியாற்றுகின்றமை அதற்கான காரணமாகும். அந்நிறுவனத்தின் தகவல் தொடர்பாடல் பிரிவினருடன் எமது குழுவினர் இணைந்து மிகவும் ஒத்துழைப்புடன் நீண்டநாட்களாக பணிபுரிந்;தனர். இதனால் ஒபிஸ்365 தமது சேவையை விஸ்தரித்துக்கொள்ளும்போது அந்நிறுவனத்தின் நாளாந்த கடமைகளுக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படவில்லை.' என்றார்.


இதன்போது கருத்து தெரிவித்த ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதம உப தலைவர் மற்றும் பிரதான தொடர்பாடல் அதிகாரி ரமேஷ் சண்முகநாதன், இதனை ஸ்தாபிக்கும்போது எச் வன் நிறுவனம் செயற்பட்ட விதம் பாராட்டத்தக்கது. பாரிய ஊழியர்களை தமது முன்னைய மின்னஞ்சல் முகவரியிலிருந்து புதிய மின்னஞ்சல் முகவரிக்கு கொண்டுவருவது இலகுவான காரியமல்ல. எச் வன் நிறுவனம் அதனை சிறப்பாக முகாமைத்துவம் செய்தது என கூறினார்.

அத்துடன் டி.கே.எஸ் செக்கிரியூட்டிஸ் நிறுவனத்தில் ஒபிஸ் 365 ஸ்தாபிக்க எச் வன் நிறுவனம் 24 மணித்தியாலத்துக்கும் குறைவான காலத்தையே செலவிட்டுள்ளது. இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும் அந்நடவடிக்கையை மிக வெற்றிகரமாக எச் வன் நிறைவேற்றியது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் டி.கே.எஸ் செக்கிரியூட்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ரூல்ப் வீரசிங்க கருத்து தெரிவித்தார். எமது நிறுவனத்தின் அபிவிருத்தி மற்றும் வர்த்தக சூழலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஒபிஸ் 365 தேர்ந்தெடுக்க நிறுவனம் முன்வந்தபோது எச் வன் நிறுவனம் சிறந்த சேவையை வழங்கியது. இதன்மூலம் எந்தவொரு பாரிய நிறுவனத்துக்கும் தமது சேவையை வழங்க எச் வன் நிறுவனத்தால் முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் என சுட்டிக்காட்டினார். 

மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பாரிய வர்த்தக பிரிவுக்கான பணிப்பாளர் இம்ரான் வில்காசிம் கருத்து தெரிவிக்கையில், தெரிவிக்கையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் ஆரம்பம் முதலே எச் வன் நிறுவனம் இணைந்து செயற்பட்டது. அத்துடன் தகவல் தொழில்நுட்ப சந்தையில் எத்தகைய பின்னணியிலும் சிறப்பாக செயற்படக்கூடிய ஆற்றல் நிறைந்த எச் வன் நிறுவனத்துடன் மைச்ரோசொப்ட் நிறுவனம் எதிர்காலத்திலும் சிறந்த தொடர்புகளை பேணும் என கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .