2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

'மவ்பிய பிரணாம' திட்டத்தை ஆரம்பிக்கும் லங்கெம் ரொபியலக்

A.P.Mathan   / 2013 மார்ச் 23 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


லங்கெம் ரொபியலக் பி.எல்.சி. நிறுவனமானது அண்மையில் புதுமையானதொரு முன்னெடுப்புத் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளது. அதன் காரணமாக அனைத்து செலவுகளும் லங்கெம் நிறுவனத்தால் செலுத்தப்படும் விதத்தில், பல்வேறு மதங்களின் புனிதஸ்தலங்களை தரிசிப்பதற்கான யாத்திரைகள் பலவற்றை பரிசாக வெல்லும் வாய்ப்பு இலங்கையின் சகல பாகங்களிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது.

கிட்டத்தட்ட நிறுவனத்தின் அனைத்து நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டங்களும் வாடிக்கையாளர்களை மையப்படுத்தியவையாகும். எவ்வாறிருந்த போதிலும், 'மவ்பிய பிரணாம' (Mawpiya Pranama) என்ற இத்திட்டத்தின் பெயர் எடுத்துரைப்பதைப் போலவே, தமது பெற்றோருக்கு அல்லது குடும்பத்திலுள்ள முதியோருக்கு ஒரு புனித யாத்திரையை வழங்குவதன் ஊடாக அவர்களுக்கு வெகுமதியளிக்கவும் நன்றி தெரிவிக்கவும் பிள்ளைகளுக்கு தனிச்சிறப்புமிக்க சந்தர்ப்பத்தை இத்திட்டம் வழங்குகின்றது. இதன்மூலம் இளமையிலேயே அவர்களது வாழ்க்கை வர்ணமயமானதாக மாற்றப்படும் அதேவேளை, பலரது கனவுகள் நனவாகுவதற்கும் வழிவகுத்துக் கொடுக்கின்றது.

லங்கெம் சிலோன் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் ருவான் டீ. வீரசிங்க கூறுகையில், 'மவ்பிய பிரணாம முன்னெடுப்பானது இவ்வகைசார் முதலாவது முயற்சியாக திகழ்வதுடன், எமது நாட்டுப் பிரஜைகள் தமது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்திலுள்ள முதியவர்களின் கனவுகளை நனவாக மாற்றுவதற்கான சிறந்ததொரு வாய்ப்பையும் கொடுக்கின்றது. எமது தாய்மார்களினதும் தந்தைமார்களினதும் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாகவும் வர்ணமயமானதாவும் மாற்றியமைக்கின்ற இந்த முன்முயற்சியில் ஈடுபடுகின்றமை எமக்கு மிகுந்த மனத்திருப்தியை அளிக்கின்றது. மில்லியன் கணக்கான இலங்கை மக்களின் மத்தியில் நம்பகத்தன்மை மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலான மூன்று தசாப்தகால வளமிக்க மரபுரிமையை கட்டியெழுப்பியுள்ள லங்கெம் நிறுவனத்தைச் சேர்ந்த நாம், எமது வாடிக்கையாளர்களின் குடும்பங்களில் ஒரு அங்கத்தவராக 'ரொபியலக்' இனை மாற்றியமைப்பதில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். ஒரு நபரினது வாழ்விற்கு பெறுமதி சேர்ப்பது மட்டுமன்றி, வெறுமனே வர்ணங்களை மட்டும் வழங்குவதற்கு மாறாக ஏககாலத்தில் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு மதிப்பளிப்பதிலும் 'ரொபியலக்' ஈடுபட்டு வருகின்றது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. 'ரொபியலக்' - வாழ்க்கைக்கு வர்ணம் சேர்ப்பது மட்டுமல்லாமல் அதற்கும் ஒருபடி மேலே சென்று வாழ்க்கைக்கு பெறுமானத்தையும் அளிக்கின்றது' என்றார்.

தற்போது முன்னெடுக்கப்படும் 'மவ்பிய பிரணாம' நிகழ்ச்சித் திட்டமானது, எமது சமூகத்தில் வாழும் பௌத்த மற்றும் இந்து மக்களை மையமாகக் கொண்டமைந்துள்ளது. 10 லீற்றர்களுக்கு அதிகமான ரொபியலக் எமல்சன் (Emulsion) மற்றும் வெதர்கோர்ட் (Weathercoat) வர்ணப் பூச்சுக்களை கொள்வனவு செய்கின்ற வாடிக்கையாளர்களிடையே இருந்து வெற்றியாளர்களை தெரிவுசெய்து, அவர்களுடன் சம்பந்தப்பட்ட பண்டிகைக் காலத்தில் பல்வேறுபட்ட இடங்களுக்கு சமயம்சார் யாத்திரை செல்வதற்கான சுற்றுப்பயண வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதே இத்திட்டத்தின் அடிப்படை எதிர்பார்ப்பாகும். இந்த முன்மாதிரித் திட்டம் மூன்று மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுவதுடன், மே 31ஆம் திகதி நிறைவடையும். இதன்படி அதிர்ஷ்ட சீட்டிழுப்பு ஊடாக தேர்ந்தெடுக்கப்படும் 130 வெற்றியாளர்கள், தம்பதிவ மற்றும் திருப்பதி ஆகிய புனிதஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும் வசதியை பரிசாக பெறுவார்கள்.

இதேபோன்ற சீட்டிழுப்புக்கள் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் இடம்பெறவுள்ள அதேநேரம், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ புனிதஸ்தலங்களுக்கு சமய யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை வெற்றிகொள்வதற்கான சாத்தியத்தன்மையையும் இதன்மூலம் 'ரொபியலக்' தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .