2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

கையடக்க தொலைபேசி மோசடிகள் தொடர்பில் புதிய நடைமுறை

A.P.Mathan   / 2013 மார்ச் 25 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழு ஒவ்வொரு கையடக்க தொலைபேசியினதும் IMEI குறியீடுகளை கொண்ட இனங்காணல் தரவு மையமொன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் இந்த தரவு மையம் (CEIR) அனைத்து வலையமைப்புகளுடனும் இணைக்கப்பட்டு, அவற்றை நேரடியாக இந்த வலையமைப்புகளுக்கு இணைத்து, தடைசெய்யப்பட்ட IMEI குறியீடுகளை பதிவு செய்யக்கூடிய வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம், ஒரு வலையமைப்பில் தடைசெய்யப்பட்ட IMEI குறியீட்டை கொண்ட கையடக்க தொலைபேசி பிரிதொரு வலையமைப்பில் வேலை செய்வது தடைசெய்யப்படும். இந்த தரவு மையம் இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழுவின் மூலம் கையாளப்படவுள்ளது.

இந்த முறை மூலம், திருடப்படும் கையடக்க தொலைபேசிகள் மற்றும் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகள் போன்ற விபரங்களை இலகுவாக குறித்த வாடிக்கையாளர்களுக்கு அறிந்து கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .