2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையின் ஆடை உற்பத்திகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளுக்கு இந்தியா வரிச்சலுகை

A.P.Mathan   / 2013 மார்ச் 28 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஆடை உற்பத்திகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளுக்கு அதிகளவு சந்தை வாய்ப்பை இந்தியாவில் வழங்கும் வகையில் வரிச்சலுகையை இந்தியா அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது இரு நாடுகளுக்கிடையிலும் இடம்பெறும் பரஸ்பர வர்த்தக நடவடிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடை தயாரிப்புகளுக்கு ஏற்கனவே அமுலிலிருந்த 11 வீத வரி அறவீட்டுக்கு பதிலாக, 5 வீதம் மட்டும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளுக்கு இதுவரைகாலமும் இருந்து வந்த செல்லுபடியாகும் காலப்பகுதியான 6 மாத காலம், இனி 1 வருடமாக அதிகரிப்பதற்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணக்கத்தை வெளியிட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியாவின் வர்த்தக, தொழில்துறை மற்றும் ஆடைத்துறை அமைச்சராக இருந்த ஆனந்த் ஷர்மா மூலம் வழங்கப்பட்டிருந்த உறுதி மொழிக்கமைவாக இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .