2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்

Kogilavani   / 2013 மார்ச் 31 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்


பொது விடுமுறை தினங்கள் காரணமாக மூன்று நாட்களுக்கு மட்டுமே இடம்பெற்றிருந்த கடந்த வார பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது, முன்னைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் சற்று மாறாக முதலீட்டாளர்கள் தமது கவனத்தை ப்ளுசிப் கம்பனிகளின் பங்குகள் மீது அதிகளவு திசை திருப்பியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதன் காரணமாக பிரதான விலைச்சுட்டெண் மற்றும் ளுரூP விலைச் சுட்டெண் போன்றன சரிவை எதிர்நோக்கியிருந்தன. சிலோன் டுபாகோ, புக்கிட் தாரா, சம்பத் வங்கி, கார்சன்ஸ் கம்பர்பெட்ச் மற்றும் பீபிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளின் மீதான சரிவு பிரதான சுட்டியின் வீழ்ச்சியில் பங்களிப்பை செலுத்தியிருந்தன. 
 
கடந்த வியாழக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,735.68 ஆகவும், ளுரூP ஸ்ரீலங்கா 20 சுட்டி 3293.57 ஆகவும் அமைந்திருந்தன.

மார்ச் 25ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,330,899,111 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 14,882 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 14,033 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 849 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் செரன்டிப் என்ஜியரிங் குரூப், எஸ்.எம்.பி லீசிங், மிரமர். ஹபுகஸ்தென்ன மற்றும் சிலோன் பெவரேஜ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
செலின்சிங், டேர்டன்ஸ்(சாதாரண), பேருவெல வோல்கின், மல்டி ஃபினான்ஸ் மற்றும் கல் ஃபினான்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை

கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 52,100.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 47,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

வெள்ளி 1 கிராமின் சராசரி விலை 145.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

நாணய மாற்று விகிதம்


கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 128.54 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 195.58 ஆக காணப்பட்டிருந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .