2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

ஜா-எலவில் தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜா-எல துடெல்ல பகுதியில் அண்மையில் தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையமொனறு ஆரம ஆரம்பித்துள்ளன.

இலங்கையிலுள்ள முதன்மையான இரண்டு சர்வதேச நிறுவனங்களான லபார்ஜ் மஹாவலி சீமெந்து நிறுவனமும் மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்காவும் இலங்கையின் மிகப் பெரிய சமூகசேவை நிறுவனமான சர்வோதயவுடன் இணைந்து ஆரம்பித்துள்ளன.

லபார்ஜ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதானி சுசந்த பெரேரா, லபார்ஜ் நிறுவனத்தின் விற்பனை தொடர்பாடல் நிறைவேற்று அதிகாரி ட்ரேஸி ஹெனிபல்ஸ், சர்வோதய பியூஷன் முகாமையாளர் இசுறு சில்வா ஆகியோர்  இதன ; அங்குரார்ப்பண பைவத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சர்வோதய பியூஷன் முகாமையாளர்,

இசுறு சில்வா, இலங்கையின் எழுத்தறிவு 95 வீதமானபோதிலும் தகவல் தொழில்நுட்ப அறிவு 20வீதமாகவே உள்ளது.

இலங்கையில் தகவல் தொழில்நுட்ப அறிவு வீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக அக்கறை செலுத்தும்போது அது முக்கியமாகும். இந்த தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையத்தை அமைக்க வேண்டும் என்பது லபார்ஜ் மஹாவலி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அனுராக் கேக்கின் ஆலோசனையாகும்.

இதன்மூலம் வருடந்தோறும் 80 மாணவர்களுக்கு  பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.  

துடெல்ல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்தை நடத்தி செல்வதற்கான நிதி உதவிகளை லபார்ஜ் மஹாவலி சீமெந்து நிறுவனம் ஏற்றுள்ளதுடன் தகவல் தொழில்நுட்ப உதவிகளை மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் கண்காணிப்பு பணிகள் சர்வோதய பியூஷன் நிறுவனத்தின் கண்காணிப்பின்  கீழ் இடம்பெறுகின்றது. 

இதன்மூலம் குறித்த பகுதியில் வசிக்கும் இளைஞர் யுவதிகளின் தகவல் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .