2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

கண்படல சத்திர சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் சன்;ஷைன்ஸ் நிறுவனம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


சன்ஷைன்ஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான சுவிஸ் பயோஜனிக்ஸ் லிமிட்டட்  (SBL) அரசாங்க வைத்தியசாலைகளில் 250 கண்படல அறுவை சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் பார்வை திறன் அதிகரிக்கும் தொடுவில்லைகள் (லென்ஸ்களையும்) அத்தியாவசிய பொருட்களையும் அன்பளிப்பு செய்துள்ளது. 

எதிர்காலத்தில் இலவச கண்படல அறுவை சிகிச்சைகளுக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்;பு வழங்கும் நிறுவனத்தின் யோசனைத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே சுகாதார அமைச்சினூடாக இந்த அன்பளிப்பு சுகாதார அமைச்சில் அண்மையில் கையளிக்கப்பட்டன. 

இலங்கை சுகாதாரத்துறையில் கடந்த 45 ஆண்டுகளாக ளுடீடு  நிறுவனம் மருத்துவ பொருட்களை அர்ப்பணிப்புடன் விநியோகித்து வருகின்றதுடன் சந்தையில் சிறப்பானதொரு இடத்தையும் தன்வசப்படுத்தியுள்ளது.  

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர்.பி.ஜி.மஹிபாலவிடம் சத்திரசிகிச்சைக்கு அத்தியாவசியமான லென்ஸ்கள் மற்றும் பொருட்களை கையளித்ததன் நோக்கம் விஷன் 2020 கண்புரை   ஒழிப்புத்திட்டத்திற்கு அமையவேயாகும். அத்துடன்  இவ்வாறு கையளிக்கப்பட்ட முதலாவது தொகுதி பொருட்கள் டொக்டர். சாயா சமரசிங்கவினால், ஹெட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண்படல சத்திரசிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.

அத்துடன் ஏனைய தொகுதிகளுக்கு தேவையான லென்ஸ்கள் நாட்டிலுள்ள வௌ;வேறு வைத்தியசாலைகளுக்கு எதிர்காலத்தில் அனுப்பி வைக்கவும் நிறுவனம் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .