2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மஹிந்த சரணபாலவுக்கு கௌரவம்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜப்பானிய நாட்டின் உற்பத்தித்திறன் சார்ந்த கொள்கைகளான 5S & Kaisen போன்றவற்றை கடந்த 23 வருட காலமாக இலங்கையில் அறிமுகப்படுத்தி, சேவை சார்ந்த கொள்கைகளை அபிவிருத்தி செய்யும் வகையில் தமது சேவையை வழங்கியிருந்த களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் நடப்பு பிரதம நிறைவேற்று அதிகாரியான மஹிந்த சரணபாலவுக்கு ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சம்மேளனம் (JASTECA) சிறப்பு கௌரவிப்பு விருதொன்றை வழங்கியிருந்தது. கொழும்பு கலதாரி ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற JASTECA உற்பத்தித் திறன் விருதுகள் 2013 நிகழ்வின் போது மஹிந்த சரணபால அவர்களுக்கு இலங்கைக்கான ஜப்பானிய பதில் உயர்ஸ்தானிகர் ஹிதேகி அஷிஷுகா மூலம் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் பிரதம அதிதியாக MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜய் அமலீன் பங்குபற்றியிருந்தார்.

நவலோக குழுமத்தில் முகாமையாளராக கடமையாற்றும் போது, உற்பத்தி நிர்வாகம் தொடர்பான கற்கைநெறியில் 1989ஆம் ஆண்டு சரணபால ஜப்பானிய நாட்டின் புலமைப்பரிசிலை பெற்றிருந்தார். உலகளாவிய ரீதியில் 22 அங்கத்தவர்களை கொண்டிருந்த இந்த புலமைப்பரிசில் குழுவில் இடம்பெற்ற ஒரே இலங்கையர் எனும் பெருமையையும் இவர் தனதாக்கியிருந்தார். இவர் ஜப்பானில் தங்கியிருந்த காலப்பகுதியில், 5S & KAIZEN பற்றி இவர் முறையாக பயின்றார். பின்னர், இந்த கொள்கைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் வகையில் பல கருத்தரங்குகளையும், செயலமர்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தார்.

சரணபால தனது சொந்த நிறுவனமான M & S அசோசியேட்ஸ் கொன்சல்ட்டன்ட்ஸ் இனை 2004ஆம் ஆண்டு நிறுவியிருந்தார். இதன் மூலம் 60 இலங்கை நிறுவனங்களுக்கும் ஒரு டன்சேனிய நாட்டின் கம்பனிக்கும் ஆலோசனைகளை வழங்கியிருந்தார். இவரது ஆலோசனைகள் வெற்றிகரமான முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், சுமார் 12 நிறுவனங்களுக்கு உற்பத்தித்திறன் சார்ந்த விருதுகள் வழங்கலின் போது தங்க விருதுகளை வெற்றி கொள்ள ஏதுவாக அமைந்திருந்தது. இவரின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்ட நிறுவனங்களில் பிரான்டிக்ஸ், MAS ஹோல்டிங்ஸ், களனி கேபிள்ஸ் பிஎல்சி, ஏசிஎல் கேபிள்ஸ், யுனிலீவர், அக்குவா பகேஜிங், ஃபொன்டெரா, அற்லஸ் மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் போன்றன உள்ளடங்குகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .