2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

உலக சந்தையில் தங்கத்தின் விலை சரிவு - இலங்கையிலும் பிரதிபலிப்பு

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


(ச.சேகர்)

உலக சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 3 தசாப்த காலப்பகுதிக்கு பின்னர் குறிப்பிடத்தக்களவு சரிவடைந்துள்ளமையை தொடர்ந்து, இலங்கை சந்தையிலும் அதன் பிரதிபலிப்பு உணரப்பட்டுள்ளது. கடந்த வாரம் இலங்கையில் 24 கெரட் தங்க பவுணொன்றின் விலை 47,800 ரூபா ஆகவும், 22 கெரட் தங்க பவுணொன்றின் விலை 44,450 ரூபா ஆகவும் அமைந்திருந்ததாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
 
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,882.25 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3336.12 ஆகவும் அமைந்திருந்தன.

ஏப்ரல் 16ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 4,024,527,378 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 33,800 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 32,650 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,150 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சிட்ரஸ் லெயிஷர் (உரிமைப்பங்குகள்), என்வி.ரிசோர்சஸ்(உரிமைப்பங்குகள்), மேர்க். சிப்பிங், சுவிஸ்டெக் மற்றும் சிங்கலங்கா போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

கலாமசூ, ஏ.ஐ.ஏ. இன்சூரன்ஸ், பான் ஏசியா, யூனியன் வங்கி மற்றும் கொன்வீனியன்ஸ் பூட்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 127.18 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 195.04 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .