2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஹேலீஸ் நிறுவனத்தின் புதிய கிளை யாழில் திறப்பு

Super User   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் புதிய கிளை இன்று திங்கட்கிழமை யாழில் திறந்து வைக்கப்பட்டது. யாழ். கோண்டாவில் வீதியிலுள்ள விவசாய திணைக்களத்திற்கு அருகாமையில் திறந்துவைக்கப்பட்டது.

வுட மாகாணத்திற்கான புதிய கிளையினை ஹேலீஸ் நிறுவனத்தின் நிர்வாக முகாமையாளர் ரிஸ்வி சயீட் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்ததுடன் பெயர்ப் பலகை திரை நீக்கமும் செய்துவைத்தார்.

இதன்போது வாடிக்கையாளர்களுக்கு விவசாய பொருட்கள் விற்பனை இடம்பெற்றன. 1878 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 145 வருடங்களுக்கு மேலாக தனது சேவையினை மேற்கொண்டுள்ளதுடன் வட மாகாணத்தில் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்து சிறந்த சேவை ஆற்றுவதற்காகவே இன்று இக்கிளை யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .