2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

நான்கு பாடசாலைகளுக்கு ஆதரவளித்த 'மஞ்சி சமக கமட சரண' திட்டம்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 22 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


மஞ்சி வர்த்தகநாமத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டங்களில் ஒன்றான மஞ்சி சமக கமட சரண திட்டத்தின் மூலம் பன்னிப்பிட்டிய மாலப்பல்ல விஜயகோஷ வித்தியாலயம், கேகாலை கனிஷ்ட பாடசாலை, மூதூர் அலீம்சென்னய் முஸ்லீம் பாடசாலை மற்றும் களுத்துறை பயாகல ஹல்கந்தவில மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவியளிக்கும் பொருட்டு நான்கு புதிய திட்டங்களை முன்னெடுத்திருந்தது. நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்ட பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டங்களுள் ஏற்கனவே 60 திட்டங்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.

மஞ்சி சமக கமட சரண திட்டத்தின் கீழ் பன்னிப்பிட்டிய மாலப்பல்ல விஜயகோஷ வித்தியாலயம் மற்றும் மூதூர் அலீம்சென்னய் முஸ்லீம் பாடசாலை போன்றவற்றிற்கு வாசிகசாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கேகாலை கனிஷ்ட பாடசாலையின் அத்தியாவசிய தேவையாகவிருந்த புதிய வகுப்பறை கட்டடமும், களுத்துறை பயாகல ஹல்கன்தவில மகா வித்தியாலயத்திற்;கு சுத்தமான குடிதண்ணீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டன. இப் புதிய திட்டத்தின் மூலம்; அப்பாடசாலைகளைச் சேர்ந்த 1000 இற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுகூலங்களை பெற்றனர்.

இவ் ஒவ்வொரு பாடசாலைகளினதும் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் நோக்கிலும், விரைவாக தீர்வுகளை வழங்கும் பொருட்டும் இத்திட்டத்துடன் நாடுபூராகவும் உள்ள மஞ்சி விற்பனை குழுவினர் இணைந்து பணியாற்றுகின்றனர். இத் திட்டத்திற்கான நிதியை நிர்வாகம் வழங்குவதுடன், அப் பிரதேச மக்களின் பங்களிப்புடன் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இத் திட்டங்களின் பிந்திய மதிப்பீடுகளை மஞ்சி விற்பனை படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவருமான நந்தன விக்ரமகே கருத்து தெரிவிக்கையில், 'மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். மஞ்சி சமக கமட சரண திட்டமானது சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், அவர்களின் வாழ்க்கை தரத்தினையும் மேம்படுத்துகிறது. இத் திட்டத்துடன் இணைந்துள்ள மஞ்சி விற்பனை குழுவினரின் செயற்பாடுகள் சமூகத்தின் நன்மதிப்பினை பெற்றுள்ளது. நாம் முன்னெடுத்த 60 பின்தங்கிய கிராம அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நாடுபூராகவும் உள்ள பல்லாயிரக்கணக்கானோர் அனுகூலங்களை அடைந்துள்ளனர்' என்றார்.

மேலும் இப்பாடசாலைகளில் தமது கல்வியை தொடர்வதில் சிரமத்தை எதிர்கொண்ட மாணவர்களிற்கு மஞ்சி டிகிரி புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. இப் புலமைப்பரிசில்கள் மூலம் மாணவர்களின் கல்விக்கான நிதிவசதி வழங்கப்படுவதுடன், மாணவர்கள் தமது கல்வியினை பூர்த்தி செய்யும் வரையிலும் இவ்வசதிகள் வழங்கப்படுகின்றன. சிலோன் பிஸ்கட் லிமிடெட் நிறுவனமானது இப் புலமைப்பரிசில்தாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், தொடர்ந்தும் அவர்களின் தேவைகள் குறித்து அக்கறை செலுத்தி வருகின்றமை விசேட அம்சமாகும்.

மேலும் மஞ்சி சமக கமட சரண திட்டத்தின் மூலம் நாடுபூராகவும் உள்ள பாடசாலைகளில் கணினி அறை வசதி, 'நெனசல' நிலையங்கள், குடிதண்ணீர் வசதிகள், வாசிகசாலை மற்றும் வகுப்பறை வசதிகள் போன்ற பல வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

CBL நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பின்தங்கிய பிரதேச அபிவிருத்தி, கலாசாரம், விளையாட்டு மற்றும் கலை போன்றவற்றின் மூலம் இலங்கையிலுள்ள பல்லாயிரக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .