2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

“கடவுள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் – தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்”

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 23 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலே உள்ள தலைப்பு டுபாய் நகரிலுள்ள முன்னணி தங்க ஆபரண விற்பனையகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வாசகமாகும். தற்போது உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத சரிவை எதிர்நோக்கியுள்ள நிலையில், டுபாயை சேர்ந்த பலர் தங்க நாணயங்களை அதிகளவு கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்தி வருவதாகவும், இதன் காரணமாக தங்க நாணயத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய சந்தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றின் விலை 1335.30 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகியிருந்தது. இது கடந்த இரண்டு ஆண்டுகளி்ல் பதிவாக ஆகக்குறைந்த பெறுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் நகரம் என அழைக்கப்படும் டுபாய் நகரில் காணப்படும் தங்கத்துக்கான கேள்வி அதிகரிப்பின் காரணமான தட்டுப்பாடு, உலகின் ஏனைய நாடுகளிலும் பரவலாக காணப்படுவதாக சர்வதேச செய்திச் சேவைகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் சில விற்பனை நிலையங்கள் தாம் அதிக விலை செலுத்தி கொள்வனவு செய்திருந்த தங்க நாணயங்களை விற்பனை செய்யாமல் பதுக்கி வைத்திருப்பதாகவும், இவர்கள் விரைவில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் வருமான வரி செலுத்த தவறுபவர்களுக்கெதிராக இந்திய அரசு முன்னெடுக்கவுள்ள கடுமையான சட்ட விதிமுறைகளை தொடர்ந்து தங்கத்தின் விலை மேலும் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாடுகளில் தங்கத்தை அதிகளவு கொள்வனவு செய்யும், அல்லது முதலீடு செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னிலையில் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .