2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி?: இலங்கை சுற்றுலா சபை விளக்கம்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 24 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து நேற்று தமிழ்மிரரின் வணிக பகுதியில் பிரசுரமாகிய செய்திக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை சுற்றுலா சபை விளக்கமளித்துள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குறித்த இரு மாத காலப்பகுதிக்குமான புள்ளி விபரங்கள் தயாராகியுள்ளன. இந்த புள்ளிவிபரங்களை வெளியிடுவதில் தற்சமயம் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு பிரதான காரணமாக, முறையாக தகவல் திரட்டு மற்றும் தரவு வைப்பு கட்டமைப்பை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டு வருவதாகவும், இதன் காரணமாக குறித்த காலத்தில் புள்ளி விபரங்களை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இந்த வாரத்தில் குறித்த விபரங்கள் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகளை சபை மேற்கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

கடந்த இரு மாத காலப்பகுதியில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பல மாற்றங்களை எதிர்நோக்கியிருந்தது. புதிய பணிப்பாளர் நாயகம் சபைக்கு கடந்த மார்ச் மாதமளவில் நியமிக்கப்பட்டிருந்தார். இவரின் மேற்பார்வையின் கீழான புதிய நிர்வாக குழுவினருக்கு புள்ளிவிபரங்கள், தரவுகள் குறித்த விடயங்களை முறையாக அறிந்து கொள்வதற்கு போதிய கால அவகாசம் தேவைப்பட்டிருந்தது.

எனவே சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி போன்ற கருத்துகளை நாம் மறுக்கிறோம். எமது நிர்வாக குழுவில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவே புள்ளிவிபரங்களை வெளியிடுவதில் தாமதம் காணப்பட்டதே தவிர, வேறெந்த விடயமும் அல்ல. விரைவில் எமது இணையத்தளத்தின் மூலமாக 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாத காலப்பகுதிக்கான புள்ளி விபரங்கள் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .