2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

லோஃவ்ஸ் குழுமம் நிதிச் சேவைகள் துறையில் பிரவேசம்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 24 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

லோஃவ்ஸ் குழுமம் நிதிச் சேவைகள் துறையில் பிரவேசிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. லோஃவ்ஸ் கெப்பிட்டல் எனும் நிதிசார் நிறுவனத்தை தாபித்ததன் மூலம் இந்த துறையில் லோஃவ்ஸ் பிரவேசித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பல்தேசிய குழுமங்களில் ஒன்றான லோஃவ்ஸ் குழுமம், இலங்கையர்களின் லீசிங், வர்த்தக நோக்கிலான கடன்கள், வாடகை கொள்வனவு, பிரத்தியேக கடன்கள் மற்றும் ஃபெக்ட்டரிங் போன்ற தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தனது சேவைகளை வழங்கவுள்ளது.

இலங்கை பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய துறைகளில் ஒன்றாக நிதித்துறையை குழுமம் இனங்கண்டுள்ளது. இதன் காரணமாக, இந்த துறையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் லோஃவ்ஸ் குழுமம் மொத்த புரள்வு பெறுமதியாக 21.8 பில்லியன் ரூபாவை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .