2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

அதியுயர் வருமானங்களை தரக்கூடிய தொழில்வாய்ப்புகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு முக்கியத்துவம்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளை பொறுத்தமட்டில் அதியுயர் வருமானங்களை வழங்கக்கூடிய தொழில்வாய்ப்புகள் குறித்த நாடுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. இதன் மூலம் வறுமை ஒழிப்பு, நகரங்கள் அபிவிருத்தியடைதல், இளைஞர்களுக்கு வன்முறை தூண்டல் அற்ற மாற்று வழிமுறைகள் காண்பிக்கப்படுவது போன்றன எய்தப்படும் என உலக அபிவிருத்தி அறிக்கை 2013இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொழில் வாய்ப்பு வழங்கப்படுவதன் மூலம், விசேடமாக பெண்களுக்கு தமது பிள்ளைகளின் முன்னேற்ற நடவடிக்கைகளில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கின்றது. அத்துடன் வினைத்திறன் அதிகரிப்பதுடன், இளைஞர்களுக்கு தமது கவனத்தை செலுத்தக்கூடிய சிறந்த மூலமாக தொழில்கள் அமைந்திருக்கும். இதனால் வன்முறை தவிர்க்கப்படும்.

இலங்கையை பொறுத்தமட்டில் இளம் பெண்களுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவது என்பது மிகவும் சவாலான காரியமாக அமைந்துள்ளது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .