2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வங்கிகளின் பங்குகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 29 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


-ச.சேகர்

கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் - வாங்கல்களை பொறுத்தமட்டில் வங்கிகளின் பங்குகளை கொள்வனவு செய்வதில் பெறுமளவான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்ததை கடந்தவாரம் அவதானிக்க முடிந்திருந்தது. 4 நாட்களுக்கு மட்டுமே இடம்பெற்ற கடந்தவார கொடுக்கல் வாங்கல்களின் போது, நெஸ்லே நிறுவனம் தனது பங்கிலாபம் வழங்குவது குறித்த அறிவித்தலை வெளியிட்டிருந்தது. அதுபோலவே, சிலோன் டுபாக்கோ நிறுவனம் வெகு விரைவில் இடைக்கால பங்கிலாபம் குறித்த அறிவித்தலை வெகுவிரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
 
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,962.17 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3359.36 ஆகவும் அமைந்திருந்தன.

ஏப்ரல் 22ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,913,532,480 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 45,150 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 43,889 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,251 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சிலோன் லெதர் (உரிமைப்பங்குகள்) (5.00), சிலோன் பிரின்டர்ஸ், சிலோன் லெதர் (உரிமைப்பங்குகள்) (5.20), டச்வுட் மற்றும் இன்டஸ்ரியல் அஸ்ப். போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

தங்கரீன், பிம்புத் ஃபினான்ஸ், செலின்சிங், ஆர்பிகோ மற்றும் ஒன்.அலி போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 47,700 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,800 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 128.41 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 198.97 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .