2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

'மவ்பிய பிரணாம' திட்டத்தின் முதல் சீட்டிழுப்பின்; வெற்றியாளர்கள்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


லங்கெம் ரொபியலக் பி.எல்.சி. நிறுவனம் தனது 'மவ்பிய பிரணாம' எனும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் பிரசார ஊக்குவிப்புத் திட்டத்தின் முதலாவது தொகுதி வெற்றியாளர்களை அண்மையில் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஊக்குவிப்புத் திட்டமானது மூன்று மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படுவதுடன், மே மாதம் 31ஆம் திகதியன்று நிறைவடையும். இதற்கமைய மொத்தமாக 130 வெற்றியாளர்கள் அதிர்ஷ்ட சீட்டிழுப்பின் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளனர். அதேநேரம், தம்பதிவ மற்றும் திருப்பதி ஆகிய புனிதத் தலங்களை தரிசிப்பதற்கான யாத்திரைகளை அவர்கள் ஒவ்வொருவரும் வெகுமதியாக பெற்றுக் கொள்வார்கள்.

கடந்த மாதத்தின் முற்பகுதியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட 'மவ்பிய பிரணாம' ஊக்குவிப்பு பிரசாரத் திட்டம் ஒரு புதுமையான முன்னெடுப்பாக திகழ்கின்றது. இதன்மூலம் அனைத்து செலவுகளும் லங்கெம் நிறுவனத்தால் செலுத்தப்படும் விதத்திலமைந்த, பல்வேறு  புனித ஸ்தலங்களை தரிசிப்பதற்கான யாத்திரைகள் பலவற்றை பரிசாக வெல்லும் வாய்ப்பை இலங்கையின் சகல பாகங்களிலுமுள்ள வாடிக்கையாளர்கள் வெற்றி கொள்ளக் கூடியதாக உள்ளது.

'மவ்பிய பிரணாம' என்ற அதனது பெயர் எடுத்துரைப்பதைப் போலவே, தமது பெற்றோருக்கு அல்லது குடும்பத்திலுள்ள முதியவர்களுக்கு ஒரு புனித யாத்திரையை அன்பளிப்பாக வழங்குவதன் ஊடாக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான தனிச்சிறப்புமிக்க ஒரு சந்தர்ப்பத்தை இத்திட்டம் பிள்ளைகளுக்கு வழங்குகின்றது. இதன்வாயிலாக பலரது கனவு நனவாகின்றது.

லங்கெம் சிலோன் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் ருவான் டீ. வீரசிங்க கூறுகையில், 'மவ்பிய பிரணாம முன்னெடுப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட நாளிலிருந்து அது தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற பிரதிபலிப்புக்கள் மிகவும் ஊக்கம் அளிப்பனவாக காணப்பட்டன. அதன் பயனாக, எம்மோடு வாழ்கின்ற ஏனைய பிரஜைகள் தமது பெற்றோர் மற்றும் குடும்பத்திலுள்ள முதியவர்களின் கனவை நனவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை எம்மால் வழங்க முடிந்துள்ளது என்பதையிட்டு நாம் மிகுந்த மனமகிழ்ச்சியடைகின்றோம்' என்று தெரிவித்தார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 'மவ்பிய பிரணாம' பிரசார நிகழ்ச்சித் திட்டமானது, முதற்கட்டமாக எமது சமூகத்திலுள்ள பௌத்த மற்றும் இந்து மக்களை மையமாகக் கொண்டமைந்துள்ளது. 10 லீற்றர்களுக்கு அதிகமான ரொபியலக் 'எமல்சன்' (நுஅரடளழைn) மற்றும் 'வெதர்கோர்ட்' (றுநயவாநசஉழயவ) வர்ணப் பூச்சுக்களை கொள்வனவு செய்கின்ற வாடிக்கையாளர்கள் தானாகவே அதிர்ஷ்ட சீட்டிழுப்பு ஒன்றிற்குள் உள்வாங்கப்படுவார்கள்.  இதிலிருந்து தெரிவுசெய்யப்படும் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு அவர்களது சமயத்துடன் சம்பந்தப்பட்ட பண்டிகைக் காலத்தில் பல்வேறுபட்ட இடங்களுக்கு புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்பு வெகுமதியாக வழங்கப்படும். 

இதேபோன்ற 'மவ்பிய பிரணாம' பிரசார ஊக்குவப்புத் திட்டங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் இடம்பெறவுள்ள அதேநேரம், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமயங்கள் தொடர்பான புனிதஸ்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை வெற்றிகொள்வதற்கான சாத்தியத்தன்மையை இதன்மூலம் 'ரொபியலக்' தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .