2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஆண்டின் முதல் காலாண்டில் சிகரெட் விற்பனை வீழ்ச்சி

A.P.Mathan   / 2013 மே 02 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் சிகரெட் விற்பனை முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 14 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிலோன் டொபாக்கோ கம்பனி பிஎல்சி அறிவித்துள்ளது. ஆயினும் நிறுவனத்தின் இலாபம் 1.8 வீதத்தால் மட்டுமே வீழ்ச்சி கண்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சவால்கள் நிறைந்த பொருளாதார சூழ்நிலையின் காரணமாக இந்த விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த காலாண்டில் மட்டும் நாட்டின் புகை பிடிப்பவர்களின் மூலம் 15.1 பில்லியன் ரூபா திறைசேரிக்கு வருமானமாக செலுத்தியிருந்ததாகவும் கம்பனி அறிவித்துள்ளது.

கம்பனி தனது வாடிக்கையாளர்களை உயர் ரக சிகரெட் வகைகளை பயன்படுத்த ஊக்குவித்துள்ளதாகவும், தனது ஏற்றுமதியை 31 வீதத்தால் அதிகரித்துக்கொள்ளவும் முடிந்திருந்தாகவும் குறிப்பிட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .