2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

நீர்கொழும்பு கூட்டறவு கிராமிய வங்கியின் வாடிக்கையாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

A.P.Mathan   / 2013 மே 04 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.இஸட்.ஷாஜஹான்


நீர்கொழும்பு கூட்டறவு கிராமிய வங்கியின் தலைமை காரியாலயம் தமது வாடிக்கையாளர்களுக்காக நடத்திய சீட்டிழுப்பின் பரிசளிப்பு நிகழ்வு இன்று சனிக்கிழமை நீர்கொழும்பில் உள்ள அதன்  தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

நீர்கொழும்பு கூட்டறவு கிராமிய வங்கியின் பொது முகாமையாளர் சேபால டி.ஹேவகே, தலைவர் எம்.எம்.பி.ஏ.டி. ஸ்டேன்லி பெர்ணான்டோ, வங்கி சேவை முகாமையாளர் திருமதி ஜசிந்தா அமரசிங்க ஆகியோர் வெற்றி பெற்றோருக்கு பரிசில்களை வழங்கினர்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி புதுவருட தினத்தில் புத்தாண்டு தின வைப்பாக வாடிக்கையாளர்களால் 29 கோடியே 35 இலட்சம் ரூபா (காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை) வைப்பிலிடப்பட்டதாகவும், 5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட, ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட மற்றும் 50 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட வருடாந்த நிலையான வைப்புகளுக்கு 15 சத வீத வட்டியும் பரிசில்களும் வழங்கப்பட்டதாகவும், அதற்கும் மேலதிகமாகவே சீட்டிழுப்பு நடத்தப்பட்டு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்படுவதாகவும் வங்கியின் பொது முகாமையாளர் சேபால டி. ஹேவகே தெரிவித்தார்.

இந்நிகழ்வில் 5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருடாந்த நிலையான வைப்புக்குரிய பரிசுப் பிரிவில் சீட்டிழுப்பில் வெற்றி பெற்ற நீர்கொழும்பு தலாகேன பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி பிளஸில்டா மேரி ஹவுரேலியாவுக்கு ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய பஜாஜ் முச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருடாந்த நிலையான வைப்புக்குரிய பரிசுப் பிரிவில் சீட்டிழுப்பில் வெற்றி பெற்ற பிட்டிபனை பிரதேசத்தைச் சேர்ந்த மதுசானி பெர்னாந்துவுக்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான ஹொண்டா, பிளஸர் ரக மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டதுடன், 50 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட வருடாந்த நிலையான வைப்புக்குரிய பரிசுப் பிரிவில் சீட்டிழுப்பில் வெற்றி பெற்ற பிட்டிபனையை சேர்ந்த எம்.எம்.சியாமலி என்பவருக்கு 36 ஆயிரம் ரூபா பெறுமதியான எல்.ஈ.டி. தொலைக்காட்சிப் பெட்டியும் பரிசாக வழங்கப்பட்டன.

அத்துடன் சிறுவர் சேமிப்பு கணக்கில் 5 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை வைப்பில் வைத்திருந்த சிறுவர்களில் சீட்டிழுப்பில் வெற்றி பெற்ற மூவருக்கு 8 ஆயிரம் ரூபா பெறுமதியான மவுண்டன் ரக துவிச்சக்கர வண்டிகளும் பரிசில்களாக வழங்கப்பட்டன.

அடுத்த வருடம் முதல் பரிசாக கார் ஒன்று வழங்கப்பட இருப்பதாக அங்கு அறிவிக்கப்பட்டது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .