Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் நடைபெற்ற LankaPay Technnovation விருதுகள் வழங்கும் நிகழ்வில், ‘The Best Common ATM Acquirer of the year - Category C’ என்ற பிரிவில் DFCC வங்கி வெற்றியாளராக தெரிவானது.
DFCC வங்கியின் நாடெங்கிலும் கிளை வலையமைப்பு 138ஆக உள்ளதுடன், தானியங்கி பணம் பெறல் இயந்திர வலையமைப்பு 115ஆக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சௌகரியம் மற்றும் அணுகும் வசதியை வழங்குவதுடன், நிதி உள்ளடக்கத்தை வசதியளிப்பதற்கும், புதிய நகரங்களில் தமது தானியங்கி பணம் பெறல் இயந்திரம் மற்றும் கிளைகளை பரவலாக்கும் செயற்பாட்டில் அண்மைய மாதங்களில் வங்கி துரிதமாக ஈடுபட்டு வருகின்றது. செலவு குறைந்த மற்றும் சௌகரியமான நிதி சேவைகளை வழங்குவதன் மூலம் நிதி உள்ளடக்கத்தை கொண்டுவரல் என்ற தொலைநோக்கினால் DFCC வங்கியின் தொழிநுட்ப தீர்வுகள் அமைந்திருக்கின்றன.
இந்த விருது வென்றமை குறித்து கருத்து தெரிவித்த DFCC வங்கியின் பிரதம நிறைவேற்றதிகாரி, லக்ஸ்மன் சில்வா, “நாடு முழுவதிலும் துரித தானியங்கி பணம் பெறல் இயந்திரம் மற்றும் கிளை பரவலாக்கம் உள்ளடங்கலாக மூலோபாய விரிவாக்கல் திட்டத்தை நாம் தயாரித்துள்ளோம். வாடிக்கையாளருக்கான வங்கி என்ற எமது கோட்பாட்டிற்கு அமைய வாடிக்கையாளர்களுக்கு சௌகரியம் மற்றும் எளிதான அணுகும் வசதியை வழங்குவதற்கு 115 இடங்களில் எமது தானியங்கி பணம் பெறல் இயந்திர வலையமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. மேலும், நாம் LankaPay வலையமைப்புடன் இணைந்துள்ளமையால், ஏனைய வங்கி அட்டைகளை வைத்திருப்போரும் எமது DFCC வங்கி தானியங்கி பணம் பெறல் இயந்திரத்தின் ஊடாக சேவைகளை அணுக முடியும். இதன் ஊடாகவும் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றது என குறிப்பிடுவதில் நாம் மகிழ்வு கொள்கின்றோம்” என்றார்.
DFCC Virtual Wallet - வங்கித் துறையில் இலங்கையின் முதலாவது Virtual Wallet; Lanka Money Transfer - இணையம்சார் வெளிநாட்டு பணக்கொடுப்பனவு முறைமை MTeller - வீடு வரையான வங்கி சேவை; மற்றும் Premier Go - முதலாவது ஊடாடும் முதன்மை வங்கி செயலி போன்ற வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான சேவைகளை வழங்குவதற்கான தொழிநுட்பம்சார் உற்பத்திகள் மற்றும் சேவைகளுடன் கைபேசி வங்கிச் சேவையிலும் DFCC வங்கி முன்னிலை வகிக்கின்றது.
அனைத்து வகையான தொழில்களுக்காகவும் எழுந்தமான கொடுப்பனவு மற்றும் பண முகாமைத்துவ தீர்வான DFCC iConnect இனை வங்கி அண்மையில் அறிமுகம் செய்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago