2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

Doc990 உடன் செலான் கார்ட்ஸ் கைகோர்ப்பு

S.Sekar   / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் கார்ட்ஸ் அண்மையில் டிஜிட்டல் சுகாதார தீர்வுகள் வழங்குநரான Doc990 உடன் கைகோர்த்திருந்தது. இதனூடாக தமது பெறுமதி வாய்ந்த அட்டைதாரர்களுக்கு அனுகூலங்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கு சௌகரியத்தை வழங்க செலான் கார்ட்ஸ் முன்வந்துள்ள நிலையில், செலான் அட்டைதாரர்களுக்கு சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், 150 க்கு மேற்பட்ட வைத்தியசாலைகளில் 4500 க்கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்களை சிகிச்சைகளுக்காக பதிவு செய்கையில், பதிவு செய்யும் கட்டணத்தில் 50% வரை விலைக்கழிவையும் பெறுவார்கள். இதனூடாக அட்டைதாரர்கள் பரிபூரண சுகாதாரப் பராமரிப்பு தீர்வின் அனுகூலத்தைப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டயலொக் அக்சியாடா பிஎல்சியினால் வலுவூட்டப்படும் Doc990 சேவை, இலங்கையின் சர்வாம்சங்களையும் கொண்ட டிஜிட்டல் சுகாதார தீர்வாக அமைந்துள்ளதுடன், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் காணப்படும் நிபுணத்துவத்தை ஒன்றிணைத்து, நவீன டிஜிட்டல் முறையில் ஒன்றிணைக்கப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்றது.

App Store மற்றும் Google Play Store இல் காணப்படும் Doc990 மொபைல் app இனூடாக அல்லது www.doc.lk எனும் இணையத்தளத்தினூடாக எளிமையான இந்த Doc990 சேவையை செலான் அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம். SLT தவிர்ந்த எந்தவொரு தொலைபேசி வலையமைப்பிலிருந்தும் 990 எனும் இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தியும் இந்தச் சேவையைப் பெறலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X