Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 04 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மற்றும் அம்பாறையில் நவீன வசதிகள் படைத்த இரு அழுத்தும் பகுதிகளை நிறுவ ஹேமாஸ் குழுமம், Eco Spindles உடன் கைகோர்த்துள்ளது. மாதாந்தம் 25,000கிலோகிராம்களுக்கு அதிகமான பிளாஸ்ரிக் கழிவுகளை திரட்டுவதை இலக்காகக் கொண்டு இந்த மூலோபாய கைகோர்ப்பு அமைந்துள்ளது. குழுமத்தின் சூழலுக்கு நட்பான நிகழ்ச்சி நிரலின் பிரகாரம், பொறுப்பு வாய்ந்த பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை ஊக்குவிப்பதை பிரதான இலக்காக அமைந்துள்ளது.
நுகர்வோர் பிளாஸ்ரிக் கழிவுகளை இல்லாமல் செய்வதற்கான உறுதியான அர்ப்பணிப்பின் பிரகாரம், ஹேமாஸ் குழுமம், Eco Spindles உடனான இந்த பங்காண்மையை பிளாஸ்ரிக் கழிவுகளை திரட்டி அவற்றை பொறுப்பு வாய்ந்த வகையில் இல்லாமல் செய்யும் தமது முயற்சியில் முக்கிய மைல்கல்லாக கருதுகின்றது. இந்த இரு அழுத்தும் பகுதிகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதனூடாக, தனது பிளாஸ்ரிக் கழிவு சேகரிப்பு செயற்பாடுகளை மேம்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதுடன், தேசிய தன்னார்வ நீடிப்பு உற்பத்தியாளர் பொறுப்புணர்வு திட்டத்துக்கு (EPR) ஆதரவு வழங்கவும் முன்வந்துள்ளது. சுழற்சியான பொருளாதார மாதிரியை கட்டியெழுப்புவது, கழிவு மற்றும் மாசை தணிப்பது போன்றவற்றில் இந்த வசதிகள் முக்கிய பங்காற்றும் என்பதுடன், பயனுள்ள தயாரிப்புகள் மற்றும் மூலப் பொருட்களின் ஆயுளை நீடிப்பதாகவும் அமைந்திருக்கும். மேலும், இந்த இரு பகுதிகளின் நிறுவுகையினூடாக, சூழவுள்ள சமூகங்களில், குறிப்பாக கழிவு சேகரிப்பாளர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
மேலும், ஹேமாஸ் தமது தயாரிப்புகளில் பிளாஸ்ரிக் பயன்பாட்டை குறைப்பதற்கான கட்டமைக்கப்பட்ட வழிமுறையை பின்பற்றுகின்றது. அதனூடாக, நிலைபேறான செயற்பாடுகளுக்கு தனது ஒப்பற்ற அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த இணைந்த செயற்பாடுகளினூடாக, ஹேமாஸ் குழுமம் மற்றும் Eco Spindles ஆகியன சூழலில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தவும், பிளாஸ்ரிக் கழிவு தணிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி, நிலைபேறான எதிர்காலத்தை ஏற்படுத்தவும் கவனம் செலுத்துகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
43 minute ago
53 minute ago
57 minute ago