Freelancer / 2023 ஒக்டோபர் 16 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபர்தீன் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமும், இலங்கையின் அலைவுநெளிவுள்ள பொதிகள் உற்பத்தி நாமமுமான Ex-Pack Corrugated Cartons PLC, இரண்டாவது வருடமாகவும் காபன் நடுநிலை சான்றிதழைப் பெற்றுள்ளது. அதனூடாக, காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு அவசியமான செயற்பாடுகள் மீதான தனது ஒப்பற்ற அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்துள்ளது.

தான் இயங்கும் தொழிற்துறையில் இந்த சாதனை மிகவும் வரவேற்கத் தக்க அம்சமாக இந்த சாதனை அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் 22.3 சதவீதத்தினால் தனது காபன் வெளியீட்டை குறைத்துக் கொள்ள Ex-Pack இனால் முடிந்திருந்தது. நிறுவனத்தின் சகல அம்சங்களைம் இலக்கு வைத்து, தனது வருடாந்த பச்சைஇல்ல வாயு (GHG) வெளியேற்றங்களை குறைத்திருந்தது.
பச்சைஇல்ல வாயு (GHG) மதிப்பீடுகள் அதன் வலு மற்றும் நீர் நுகர்வு, கழி முகாமைத்துவம், போக்குவரத்து மற்றும் அவற்றுடன் தொடர்புடைய விடயங்களிலிருந்து பெறப்பட்டதுடன், தேசிய தூப்புரவாக்கல் தயாரிப்பு நிலையத்தினால் (National Cleaner Production Centre (NCPC)) உறுதி செய்யப்பட்டிருந்தன. தொழிநுட்ப வழிகாட்டல்களை முன்னணி பசுமை கட்டட, MEP வடிவமைப்பு மற்றும் காபன் நடுநிலை ஆலோசனை ஆகியவற்றில் முன்னோடியாக அமைந்துள்ள co-energi இனால் வழங்கப்பட்டிருந்தது. Ex-Pack க்கு இந்த சான்றிதழைப் பெற்றுக் கொள்வதில் இது முக்கிய பங்கை ஆற்றியிருந்தது.
Ex-Pack தவிசாளர் சத்தார் காசிம் கருத்துத் தெரிவிக்கையில், “பெருமளவு தொழிற்சாலை செயற்பாடுகளை முன்னெடுக்கும் வியாபாரமாக அமைந்துள்ள நிலையில், தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாகவும் காபன் நடுநிலை அந்தஸ்தை பெற்றுக் கொண்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. சூழலுக்கு எமது தாக்கத்தை குறைப்பதற்கு அல்லது தடுப்பதற்கான முயற்சிகளை நாம் எப்போதும் மேற்கொண்டிருந்தமைக்கான கௌரவிப்பு நீண்ட காலமாக எமக்கு கிடைக்க வேண்டியிருந்தது. நிகர பூஜ்ஜிய காபன் வெளியீடு எனும் இலக்கை எய்துவது தொடர்பில் எமது ESG அரண்களை வலிமைப்படுத்தும் மேலதிக செயற்பாடுகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றோம்.” என்றார்.
காபன் வெளியீடுகளை தணிப்பது மற்றும் பிரதியீடு செய்வது மற்றும் நிலைபேறாண்மை தொடர்பில் தொழிற்துறையின் சிறந்த செயன்முறைகளை பின்பற்றுவது போன்றவற்றை களத்திலுள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளும் செயற்பாடுகளை Ex-Pack முன்னெடுக்கின்றது.
1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Ex-Pack Corrugated Cartons PLC, இலங்கையில் அலைவு நெளிவுள்ள பொதியிடல் தீர்வுகள் உற்பத்தித் துறையில் முன்னணி செயற்பாட்டாளராக அமைந்திருப்பதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொதியிடல் தீர்வுகளை வழங்குகின்றது. நிறுவனம் ISO 9001-2015, ISO 14001-2015, FSC COC, WRAP ஆகிய சான்றிதழ்களைப் பெற்றுள்ளதுடன், NCE ஏற்றுமதி விருதுகள், CNCI விருதுகள், லங்கா ஸ்டார் விருதுகள், NBE விருதுகள், லங்கா CSR விருதுகள் மற்றும் Green விருதுகள் ஆகியவற்றில் கௌரவிப்புகளைப் பெற்றுள்ளது.
22 minute ago
27 minute ago
36 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
36 minute ago
48 minute ago