2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

Global Housing & Real Estate (Pvt) Ltd உடன் SLT-MOBITEL கைகோர்ப்பு

Freelancer   / 2023 நவம்பர் 06 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, நீர்கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சொகுசான தொடர்மனைத் தொகுதியான ‘the Ocean Breeze Hotel Residencies’க்கு SLT-MOBITEL ஃபைபர் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக Global Housing & Real Estate (Pvt) Ltd உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையில் SLT இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க மற்றும் Global Group தவிசாளர் தசுன் விக்ரமரட்ன ஆகியோர் கைச்சாத்திட்டனர். SLT-MOBITEL குழும பிரதம அதிகாரி – நுகர்வோர் வியாபாரம் இமந்த விஜேகோன் மற்றும் Global Group பணிப்பாளர் பிரியந்தி அபேவீர ஆகியோரும் இந்த கைச்சாத்திடும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். SLT-MOBITEL மற்றும் Global Housing & Real Estate நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நீர்கொழும்பில் அமைந்துள்ள The Ocean Breeze Hotel Residencies திட்டம், உயர்மட்ட வதிவிட அபிவிருத்தித் திட்டமாகும். இதில் 199 தொடர்மனை அலகுகள் காணப்படுகின்றன. வசிப்போருக்கு சொகுசான வாழிடப் பகுதிகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இதில் உணவகம் மற்றும் ஸ்கை பார், நீச்சல் தடாகம், ஜிம்னாசியம், மொட்டைமாடி தோட்டம் மற்றும் 24-மணி நேர பாதுகாப்பு போன்ற உலகத் தரம் வாய்ந்த வசதிகள் அடங்கியுள்ளன.

SLT-MOBITEL உடனான பங்காண்மை தொடர்பில் Global Group தவிசாளர் தசுன் விக்ரமரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “SLT-MOBITEL வழங்கும் உயர்தர ஃபைபர் தீர்வுகளின் பயனை எமது வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக அனுபவித்து மகிழ்வார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஜாம்பவானுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அதனூடாக எமது நிர்மாணத் திட்டங்களுக்கு நவீன தொழில்நுட்பங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.” என்றார்.

SLT பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “Global Housing உடன் கைகோர்த்து, Ocean Breeze Hotel Residencies க்கு ஃபைபர் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதையிட்டு SLT-MOBITEL மகிழ்ச்சியடைகின்றது. வாடிக்கையாளர்களின் வாழ்க்கைமுறைகளை மேம்படுத்தும் உறுதியான மற்றும் புத்தாக்கமான தகவல் தொடர்பாடல் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான எமது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்வதாக இந்தப் பங்காண்மை அமைந்துள்ளது. SLT-MOBITEL ஃபைபர் தீர்வுகளினூடாக, ஒப்பற்ற இணைப்புத்திறன் வழங்கப்படும் என்பதில் நாம் உறுதியாக உள்ளதுடன், Ocean Breeze Hotel Residencies இன் ஒட்டுமொத்த வாழிட அனுபவத்தை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும்.

SLT-MOBITEL இனால் முழு Ocean Breeze Hotel Residencies தொகுதிக்கும் ஃபைபர் தீர்வுகளுடனான உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டு, அதிவேக இணைய இணைப்புத்திறன், தெட்டத்தெளிவான குரல் தொடர்பாடல் மற்றும் உலகத் தரம் வாய்ந்த களிப்பூட்டும் அம்சங்களான high definition (HD) TV உள்ளடக்கத்தை PEO TV ஊடாக கண்டுகளிப்பது போன்ற வசதிகள் வழங்கப்படும். அத்துடன், குடியிருப்பாளர்களுக்கு அதிவேக புரோட்பான்ட் மற்றும் தொலைத்தொடர்பாடல் சேவைகளைப் பெற்று, உலகத்துடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்வதுடன், ஒப்பற்ற வாழிட அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். அதுமட்டுமன்றி, வாடிக்கையாளர்களுக்கு தமது இல்லங்களை SLT-MOBITEL இனால் நிர்வகிக்கப்படும் Smart Home Facilities வழங்கப்படும். இதற்கும் SLT-MOBITEL ஃபைபர் வலுவூட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .