2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Huawei தயாரிப்புகளின் தரம் குறித்து அதிக கரிசனை

Gavitha   / 2016 ஒக்டோபர் 03 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

Huawei இலங்கையில் மேலதிக முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், புதிய விஸ்தரிப்பு திட்டங்களையும் கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்ற Huaw  ei  Tech Day நிகழ்வின் போது இவ் அறிவித்தலை வெளியிட்டிருந்தது. இலங்கையில் Huawei சாதனங்களுக்கான தலைமை அதிகாரி   ஹென்ரி லியு கருத்துத் தெரிவிக்கையில், “அநுராதபுரம், கண்டி மற்றும் காலி ஆகிய பகுதிகளில் நாம் மூன்று கிளைகளைத் திறந்துள்ளோம்.

இதன் மூலமாக எமது விநியோக மற்றும் விற்பனை செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர் உதவிச் சேவைகள் மற்றும் இலங்கையின் இதர பாகங்களில் செயற்பாடுகளை மேம்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது” என்றார்.  

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ‘2016இல் Huawei குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை எதிர்பார்த்துள்ளது. முன்னைய ஆண்டிலும் குறிப்பிடத்தக்களவு இலக்குகளை எய்தியுள்ளது. GFK Q3 2016 தரவுகளின் பிரகாரம் Huaw  ei சந்தை பகிர்வு சதவீதம் 24.4% ஆக உயர்வடைந்துள்ளது. இலங்கையில் இரண்டாவது சிறந்த திறன்பேசி நாமமாக வளர்ச்சியடைந்த வண்ணமுள்ளது” என்றார்.  

“தரம் மீது சந்தை நம்பிக்கையைக் கட்டியெழுப்பியுள்ளமை என்பது செயற்பாட்டுக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது. Huawei தொடர்ச்சியாகத் தனது தொழில்நுட்பத்தை புத்தாக்கம் மற்றும் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளினூடாக மேம்படுத்தி வந்துள்ளது. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் எமது வெற்றிகரமாக செயற்பாட்டுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த காரணியாக அமைந்துள்ளது. எமது ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் நாம் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதுடன், எமது சகல வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த தரமான அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்”ற என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X