Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நீர் முகாமைத்துவ முறைமை தீர்வுகளை வழங்கும் Jinasena (Pvt) Limited, தனது உற்பத்தி வரிசையை தொடர்ச்சியாக மேம்படுத்தி, புத்தாக்கத்தை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற நிறுவனத்தின் அணுகுமுறைக்கு அமைவாக இரு புத்தம்புதிய நீர்ப்பம்பிகளை அறிமுகம் செய்துள்ளது.
இரு புதிய நீர்ப்பம்புகளில் முதலாவதான NR 120/1 ஆனது புதிய 1 அங்குல 1 குதிரை வலு (1HP) வீட்டுப் பாவனை நீர்ப்பம்பாக அமைந்துள்ளதுடன், இன்று சந்தையில் கிடைக்கப்பெறுகின்ற இதே அளவையொத்த எந்தவொரு நீர்ப்பம்பியை விடவும் சிறப்பான செயற்றிறனைக் கொண்டுள்ளதை நிறுவனத்தின் சோதனைகள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்தப் பாரம்பரிய வார்ப்பு இரும்பினாலான நீர்ப்பம்பி Noryll உந்துகையை (impeller) கொண்டுள்ளதுடன், அதன் 80 அடி மொத்த மேற்பாகம் (head) மற்றும் 25-30 அடி உறிஞ்சல் ஆழம் (suction depth) மூலமாக வீட்டுப் பாவனை வாடிக்கையாளர்களின் உயர்ந்த மேற்பாக பயன்பாடுகளுக்கு மிகவும் உகந்த ஒன்றாகக் காணப்படுவதுடன், ஆழமான கிணற்றுக்கான சாதனத்தின் துணையுடன் அதனை மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும். அடக்கமான அளவைக் கொண்டுள்ள இந்த நீர்ப்பம்பு, குறைந்தளவு இரைச்சலையே ஏற்படுத்துவதுடன், மின்னழுத்த ஏற்றத்தாழ்வுகளையும் தாங்க வல்லது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது நீர்ப்பம்பு, கரையோர பிராந்தியங்கள், வட மேல், வட மத்தி மற்றும் வட மாகாணம் போன்ற ஆழமான கிணறுகளைக் கொண்ட நாட்டின் பிரதேசங்களுக்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது மற்றும் ஒரேயொரு பொலிமர் (Polymer) நீர்ப்பம்புகளாக சமீபத்தில் வெளிவந்துள்ளன.
பொலிமர் ஆனது இலேசான எடை கொண்ட, நீடித்து உழைக்கின்ற மற்றும் பாதுகாப்பான, 100% மீள்சுழற்சிப்படுத்தப்படக்கூடிய மூலப்பொருளாகும். பொலிமர் நீர்ப்பம்புகளின் நீர் மாதிரிகள் அனைத்தும் மாசற்றவை என்பதை உறுதிப்படுத்துவதற்காக கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தால் (Industrial Technology Institute - ITI) விரிவான சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நீர்ப்பம்பும் பொலிமரினால் ஆக்கப்பட்டுள்ளமையால், அரிப்புக்கு உள்ளாகாது.
42 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
49 minute ago
1 hours ago