Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
LOLC குழுவின் ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதிப் பிரிவுகள் 2016 ஆம் ஆண்டின் முதல் அரை ஆண்டில் குறிப்பிடத்தகு வணிக செயற்றிறனைப் பதிவுசெய்துள்ளன. ஆயுள் காப்புறுதிப் பிரிவு 2015 இன் முதல் அரை ஆண்டைக் காட்டிலும் 2016 இன் முதல் அரை ஆண்டில் மொத்த வழங்கிய தவணைக் கட்டணமாக (GWP) 73 % வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளமை ஆயுள் காப்புறுதிப் பிரிவு இந்நிதியாண்டின் இறுதியில் சிறந்த பெறுபேறுகளைப் பதிவுசெய்யும் என சுட்டிக்காட்டுகின்றது. இவ்வாண்டின் அரையிறுதியில் கடந்த ஆண்டை விட GWP இல் 47% வளர்ச்சியடைந்து மொத்த வழங்கப்பட்ட தவணைக் கட்டணமாக ரூ.2,537 மில்லியனைப் பதிவுசெய்துள்ளது.
நிறுவனத்தின் பொதுக் காப்புறுதிக் கடந்த வருடம் முதல் அரைஆண்டைவிட 137% ஆல் வளர்ச்சியடைந்துள்ளது. நிறுவனத்தின் மோட்டார் தவிர்ந்தக் காப்புறுதிக் கடந்த வருடம் முதல் அரை ஆண்டை விட 137% ஆல் வளர்;ச்சியடைந்து ரூ.261 மில்லியனை அடைந்துள்ளது. நிறுவனத்தின் பெருமளவு வருமானத்துக்குப் பொறுப்பான மோட்டார் வாகனக் காப்புறுதி 27மூ ஆல் வளர்;ச்சியடைந்து 2016 இன் முதல் 6 மாதங்களில் ரூ.1,441 மில்லியனைப் பதிவுசெய்தது.
இவ்வுறுதியானச் செயற்றிறன் குறித்து கருத்துத் தெரிவித்த LOLC பொதுக் காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி நிலங்க விக்கிரமசிங்க, 'எமது எதிர்பார்ப்புக்களுக்கு அப்பாற்பட்ட செயற்றிறனை தற்போதைய நிதியாண்டின் முதல் காலாண்டில் எட்டியுள்ளோம். மிகவேகமாக வளர்ந்துவரும் எமது காப்புறுதி வணிகம் குறுகிய 5 வருடங்களில் போட்டி மிக்க துறையில் பல்வேறு சேவைகளுடன் நிலைத்து நிற்கிறது.
சக்தி வாய்ந்த மூலோபாயத் திட்டத்துடன் இலக்குகளைஅடையும் நோக்கில் நிறுவனம் முன்னேறுகிறது. இத்திறமையானச் செயற்றிறன் நிதிச் சேவைகள் personal lines, bancassurance மற்றும் takaful காப்புறுதிஆகிய பன்முகத்தன்மையான சேவைகள் மற்றும் LOLC இன் நிதிச்சேவைத் தளத்தின் ஆதரவு ஆகியவற்றின் மூலம் எட்டப்பட்டது. எமது திறமையானஅணியினால் வெளிப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பு நிதி இலக்குகளை எட்ட உதவியாக அமைந்ததுடன் இந்நிதியாண்டு முழுவதும் நிதிவாய்ப்புக்கள் பற்றி நம்பிக்கையாக இருகக் காரணமாக அமைகின்றது.
மேலும் கருத்துத் தெரிவித்த விக்கிரமசிங்க, 'இவ்வருடத்தில் ஆயுள் காப்புறுதி பிரிவு சகலவழிகள் ஊடாகவும் ஊடுறுவ தயாராகவுள்ளது' என்றார். வாடிக்கையாளர்கள் LOLC இன் வலையமைப்பிலுள்ள 173 காட்சியறைகள் ஊடாக அணுகலாம். LOLC குழுவின் வலியஉறுதித்தன்மை அதன் காப்புறுதிப் பிரிவு வாடிக்கையாளர்கள் மத்தியில் பலம் பெற உதவியாக அமைந்துள்ளது.
16 minute ago
18 minute ago
46 minute ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
18 minute ago
46 minute ago
18 Sep 2025