Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி (MBSL) நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் சகல நிதியியல் தீர்வுகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் MBSL நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சுஜீவ லொகுஹேவா கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களை போன்று, வியாபார சமூகத்துக்கும் அவசியமான சகல நிதிச் சேவைகளையும் எமது நிறுவனத்திலிருந்து பெற்றுக் கொடுக்க நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதுபோன்று லீசிங் வசதிகள், சிறு மற்றும் நடுத்தரளவு தொழில்துறை நிதி வசதிகள், பாரியளவிலான தொழிற்துறை மற்றும் வியாபாரங்களுக்கான நிதி வசதிகள், தனிநபர் கடன், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்கு, சிறுவர் சேமிப்புக் கணக்கு, தங்கக் கடன் சேவை, வர்த்தக வியாபார நிதி வசதிகள், கூட்;டாண்மை ஆலோசனை சேவை, பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள், வீட்டுக் கடன்கள் போன்ற சகல நிதிச் சேவைகளையும் வாடிக்கையாளர்கள் MBSL நிறுவனத்தினூடாக பெற்றுக் கொள்ள முடியும்” என்றார்.
இலங்கையின் நிதிச் சந்தையில், MBSL நிறுவனத்தின் சிறப்பை தெளிவுபடுத்தும் வகையில், பேராசிரியர் சுஜீவ லொகுஹேவா அவர்கள் குறிப்பிடுகையில், “எமது நாட்டின் வங்கியியல் மற்றும் நிதியியல் சந்தையில் மிகவும் போட்டிகரமானது. ஆனாலும் அந்த சந்தையினுள் எமக்கென தனித்துவமான அடையாளத்தை நாம் கட்டியெழுப்பியுள்ளோம். MBSL நிறுவனத்துக்கு இலங்கையின் நிதிச் சந்தையில், மூன்று தசாப்த கால வரலாறு காணப்படுகிறது. இந்த வரலாற்றில், MBSL நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை உயர்ந்த மட்டத்தில் பேணியுள்ளது. மேலும், எமது நிறுவனத்தின் 74 பங்குகளை இலங்கை வங்கி தன் வசம் கொண்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு அரச பாதுகாப்பு கிடைக்கிறது. நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகளுக்காக ஒப்பீட்டளவில் உயர்ந்த வட்டியை நாம் வழங்குகிறோம். வாகன லீசிங் கொடுக்கல் வாங்கல்களின் போது போட்டிகரமான வட்டியை நாம் வழங்குகிறோம். அதுபோன்று, மாதாந்த தவணைக் கொடுப்பனவுகளை, வாடிக்கையாளர்களின் தேவைகளின் அடிப்படையில் நிர்ணயிப்பதற்கான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்கிறோம். தொழிற்துறை மற்றும் வர்த்தகங்களுக்கான கடன் பெற்றுக் கொள்வோருக்கு, நாம் அவர்களின் வியாபார நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்காக, தொழில் மட்டத்தில் ஆலோசனை சேவைகளையும் வழங்குகிறோம். அதுபோன்று, தகைமை வாய்ந்த, அனுபவம் பெற்ற நட்பான சேவைக்குழுவை MBSL தன்வசம் கொண்டுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago