2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

MMBL Money Transfer 3000ஆவது கிளையை திறந்து

Mayu   / 2023 டிசெம்பர் 21 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

Western Union வர்;த்தக நாமத்துடனான பணப் பரிவர்த்தனைகளுக்கான MMBL Money Transfer  தமது 3000 ஆவது கிளையை திறந்து வைத்துள்ளதன் மூலம் தமது வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

இலங்கையில் தொழிற்துறை ஜம்பவானான வெஸ்டர்ன் யூனியனின் மிகப்பெரிய பிரதிநிதியாக கருதப்படும் MMBL பணப்பரிவர்த்தனை சேவைகள் Aitken Spence மற்றும் Mercantile Merchant Bank இடையிலான கூட்டிணைந்த முயற்சி) தமது 3000 ஆவது பணக்கொடுப்பனவு கிளையை அண்மையில் கொழும்பு – 06 இல் திறந்து வைத்துள்ளதன் மூலம் தமது புதிய மைல்கல்லினை கடந்துரூபவ் அம்மகிழ்ச்சியைக் கொண்டாடியது.

ஜீன் க்ளோட் ஃபரா – மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பசுபிக் வெஸ்டர்ன் யூனியனின் தலைவர்ரூபவ் சோஹினி ரஜோலா – ஆசிய பசுபிக் தலைவர்ரூபவ் கௌரவ் யாதவ - இந்தியா மற்றும் தெற்காசியாவின் நாட்டுக்கான பணிப்பாளர் - வெஸ்டர்ன் யூனியன் மற்றும் எஸ்.எஸ். ராமநாதன் - தெற்காசியாவின் சிரேஷ்ட நாட்டுக்கான தலைவர் ஆகியோர் இந்த சிறப்பான தருணத்தில் கலந்துகொண்டனர்.

Left to right: Ms. Sohini Rajola, Head Asia Pacific, Western Union, Mr. Jean Claude Farah, President, Middle East and Asia Pacific, Western Union; and Dr. Parakrama Dissanayake, Chairman of MMBL Money Transfer (Pvt) Ltd

டாக்டர். பராக்ரம திசாநாயக்க - MMBL Money Transfer (Pvt) Ltd இன் தலைவர் ரூபவ் சமிந்த ஹிண்டுரன்கல – MMBL Money Transfer (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர்ரூபவ் கே. பாலசுந்தரம் - MMBL Money Transfer (Pvt) Ltd இன் பணிப்பாளர்ரூபவ் அசித அபேகுணசேகர - MMBL Money Transfer (Pvt) Ltd இன் பொது முகாமையாளர் ஆகியோரும் வைபவ ரீதியான திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

MMBL கடந்த நிதியாண்டில் 2100 துணைப் பிரதிநிதிகளுடன் இணைந்து இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம் அதன் வலையமைப்பை 3000 கிளைகளுடன் விரிவுபடுத்தியமையானது மாபெரும் சாதனையாகும்.

மேலும் வெஸ்டர்ன் யூனியன் ஊடாக வெளிவாரியாக பணம் பெற்றுக் கொள்ளக் கூடியரூபவ் இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட ஒரே வங்கியற்ற நிறுவனமாகவும் MMBL விளங்குகிறது.

“MMBL Money Transfer (Pvt) Ltd”இற்கு தமது 3000ஆவது நிலையத்தினை திறந்து வைக்கும் இத்தருணமானது மிகவும் சிறப்பானதொரு தருணமாகும். இதில் எனக்கு கலந்து கொள்ள கிடைத்தமையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என ஜீன் க்ளோட் ஃபரா – மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பசுபிக் வெஸ்டர்ன் யூனியனின் தலைவர் தெரிவித்தார். இலங்கை வாழ் மக்களுக்கு சேவை செய்த மிகவும் நீண்ட மற்றும் பெருமைமிகு வரலாறு வெஸ்டர்ன் யூனியனுக்கு உண்டு. 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் எமது கிளை வலையமைப்பைக் கொண்டிருப்பதில் நாம் பெருமையடைகின்றோம். அந்த வகையில் இலங்கை வாழ் மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் சேவை செய்ய MMBL Money Transfer (Pvt) Ltd உடன் இணைந்தமைக்கு பெருமையடைகின்றோம் என்பதுடன் அதற்காக எமது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இதன் மூலம் இலங்கை மக்களுக்கு முழுமையான நிதி உள்ளடக்கத்தினையும் நாம் பெற்றுத் தருகின்றோம்.”

Lighting of the oil lamp by Dr. Parakrama Dissanayake, Chairman of MMBL Money Transfer (Pvt) Ltd and Mr. Jean Claude Farah, President, Middle East and Asia Pacific, Western Union

“நீங்களும ;ரூபவ் உங்கள் நிறுவனத்தின் நிர்வாகமும் சிந்திப்பதைப் போல ரூபவ் ஒவ்வொரு நாடும்ரூபவ் ஒவ்வொரு நாட்டவரும் தங்கள் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தோர் பற்றி சிந்திக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். காரணம் அதுவே நாம் எமது நாட்டுக்கு காட்டும் முக்கியமான ஆதரவு ஆகும். இந்த கூட்டிணைவினை பலப்படுத்தவும்ரூபவ் இந்த பரிவர்த்தனைகளை தொடர்ந்தும் வளர்;க்கவும்ரூபவ் இலங்கை மக்களுக்கு தொடர்ச்சியாக எமது உதவிகளை வழங்கிடவும் நாம் விரும்புகின்றோம். அந்த வகையில் ஏதோ ஒரு முறையில் எமது பங்களிப்பினை வழங்குவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களின் புகழ்பெற்ற உலகளாவிய பங்காளியாக இருக்கும் வெஸ்டர்ன் யூனியனுடன் சேர்ந்து கொண்டாடும் முக்கியமான மைல்கல் இது. இன்று இலங்கையில் வெஸ்டர்ன் யூனியனின் மிகப்பெரிய பிரதிநிதியாக நாம் திகழ்கின்றோம். அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். அத்தோடு இலங்கைக்கு மிக முக்கியமான வருமானம் மற்றும் அந்நிய செலாவணியைப் பெற்றுத்தர நாம் வழங்கிடும் கூட்டிணைவினை மேலும் வலுப்படுத்திட நாம் தொடர்ந்தும் பணிபுரிவோம்.” என டாக்டர். பராக்ரம திசாநாயக்க - MMBL Money Transfer (Pvt) Ltd இன் தலைவர் தெரிவித்தார்.

“வெஸ்டர்ன் யூனியனுடன் எமது வலையமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் நாடு முழுவதும் வசதியாக எம்மை அணுகக் கூடியதாக இருப்பதுடன் நம்பகமான மற்றும் நட்புறவுடனான வாடிக்கையாளர் சேவை வழங்குனராக MMBL இன் நன்;நாமம் வலுப்படுத்தப்படுகிறது.

இது தற்போது நிலவும் போட்டித்தன்மைகளுள் காணப்படும் ஓர் நன்மையாகும். வளர்ச்சிக்கான வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொண்டு ரூபவ் நாம் எமது நிலைமையை உறுதியாக தக்கவைத்துக்கொண்டுள்ளதால் ரூபவ் வெஸ்டர்ன் யூனியனுடன் எமது வலையமைப்பினை தொடர்ந்தும் நாம் விரிவுபடுத்துவோம்.” என சமிந்த ஹிண்டுரன்கல – MMBL Money Transfer (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Cutting of the ribbon by Mr. Jean Claude Farah, President, Middle East and Asia Pacific, Western Union and Dr. Parakrama Dissanayake, Chairman of MMBL Money Transfer (Pvt) Ltd

வெளிநாட்டில் பணியாற்றுவோர் அனுப்பும் பணம் இலங்கைக்கு ஒரு முக்கியமான வருமானம் என்பதுடன் இலங்கைக்கு

அந்நிய செலாவணியை உருவாக்கியும் தருகிறது. MMBL தமது சேவை நிலையங்களுடன் விரிவுபடுத்தப்பட்ட வலையமைப்பை

வழங்கும் அதே வேளை ரூபவ் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு அவர்களது பணத்தை எளிதாக கையாளும் வகையில் வசதிகளை

வழங்குவதுடன ;ரூபவ் உள்நாட்டுக்கு அனுப்பும் பணத்தை பெற்றுக்கொள்ளும் சேவையை வழங்கிடும் நாட்டின் மிகப்பெரிய பிரதிநிதியாகவும் விளங்குகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X