2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

MUSCLE EDGE ஐ Edge Nutrition அறிமுகம் செய்துள்ளது

Freelancer   / 2023 செப்டெம்பர் 08 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் தரம் வாய்ந்த Whey Protein தயாரிப்பை Edge Nutrition அண்மையில் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அனைவரினாலும் இலகுவாக கொள்வனவு செய்யக்கூடிய வகையில் இந்த தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Edge Nutrition முகாமைத்துவ பணிப்பாளரும் Power World Gyms ஸ்தாபகருமான தலவு அலைலாமா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையர்களின் உணவு வேளைகளில் போதியளவு புரதம் இன்மை என்பது போஷாக்கு பற்றாக்குறைக்கான பிரதான காரணியாக அமைந்துள்ளதுடன், எமது சிறுவர்களின் உடல் வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள முடியாத தன்மையை தோற்றுவித்துள்ளதுடன், பல தசாப்த காலமாக விளையாட்டு திறமையை கட்டியெழுப்பிக் கொள்ள முடியாத நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்களில் முழுமையான திறனை வெளிப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.” என்றார்.

Whey Protein என்பது புரதத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய சிறந்த மூலமாகும். அதியுயர் அகத்துறிஞ்சல் வீதத்தை கொண்டுள்ளதுடன், MUSCLE EDGE இன் பிரதான சேர்மானமாகவும் உள்ளது. ஒரு தடவை அருந்துவதனூடாக 70 சதவீதம் தசை மாற்றல் திறனை கொண்டிருக்கும்.

MUSCLE EDGE இல் காணப்படும் புரதத்தினூடாக, தசை வளர்ச்சிக்கு அவசியமான போஷாக்குகள் வழங்கப்படுவதுடன், நோய் எதிர்ப்பு கட்டமைப்பை கட்டியெழுப்ப பெரிதும் உதவுகின்றது. எடை தூக்கல் சார்ந்த உடற் பயிற்சிகளில் ஈடுபடுவோருக்கு தமது வலிமையை மேம்படுத்திக் கொள்ளவும், தசைகளின் அளவை மேம்படுத்திக் கொள்ளவும் சிறந்த தெரிவாக MUSCLE EDGE அமைந்திருக்கும். சரியான உடற் பயிற்சிகளுடன், MUSCLE EDGE ஐ தொடர்ச்சியான உள்ளெடுக்கும் போது, உங்களால் தொடர்ச்சியாக தசையை கட்டியெழுப்பிக் கொள்ள முடியும்.

தலவு அலைலாமா தொடர்ந்தும் தெரிவிக்கையில், “சம்பியன்களை உருவாக்கும் வகையில் MUSCLE EDGE தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு உள்ளெடுப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. Whey Protein தயாரிப்பு அமெரிக்காவின் உற்பத்தியாக அமைந்திருப்பதால், உலகளாவிய ரீதியில் பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. பெருமளவானோரால் Whey Protein உள்ளெடுப்பை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படும் காலப்பகுதியில், MUSCLE EDGE ஐ அனைவராலும் கொள்வனவு செய்யக்கூடிய தயாரிப்பாக மீள அறிமுகம் செய்வதற்கு நாம் தீர்மானித்தோம். இதில் உலகத் தரம் வாய்ந்த Whey Protein காணப்படுவதால், அர்ப்பணிப்புடன் உடற் பயிற்சிகளில் ஈடுபடுவோருக்கு அனுகூலமளிப்பதாக அமைந்திருப்பதுடன், ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கும், உடற் தகைமையை பேண எதிர்பார்ப்போருக்கும் உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.

இலங்கையின் விளையாட்டு மற்றும் வினைத்திறன் போஷாக்கு துறையில் Edge Nutrition 2005 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இலங்கை விளையாட்டு மருந்துப் பொருட்கள் சம்மேளனத்தின் பரிந்துரையின் பிரகாரம் தலவு அலைலாமாவினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இன்று, MUSCLE EDGE அறிமுகத்துடன், இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சிறந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. Edge Nutrition இனால் அதன் போஷணைப் பொருட்கள் தெரிவு விரிவாக்கம் செய்யப்படும் என்பதுடன், இளம் பணிபுரியும் வயது வந்தவர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் வகையில் அமைந்திருக்கும். 1994 ஆம் ஆண்டில் Power World Gyms நிறுவப்பட்ட போது நிர்ணயித்திருந்த உயர் தரம் என்பதை பின்பற்றி, இந்தத் தயாரிப்பும் அமைந்திருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X