Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலிங்கோ லைஃவ் சிறந்த விற்பனை நிபுணர்கள், 2018இன் தேசிய விற்பனை காங்கிரஸ் (NASCO) நிகழ்வில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
இந்த விருது இலங்கை சந்தைப்படுத்தல் (SLIM) நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கம்பனியின் துறைசார் விற்பனை நிபுணத்துவத்தை மீண்டும் ஒரு தடவை உறுதி செய்யும் வகையில் இந்த விருதுகள் அமைந்துள்ளன.
A.I.P. மஞ்சுள, W.K.M.C. விக்கிரமசிங்க ஆகியோர் ஆயுள் காப்புறுதிப் பிரிவில் முன்னிலையாளர் (Frontliner) வகைப்படுத்தலின் கீழ் தங்கப் பதக்கங்களை வென்றனர். ஒரு கிளையின் துணை விற்பனை முகாமையாளரான அனுஷாத் சமசரசிங்க இதே பிரிவில் பிரதேச முகாமைத்துவ பிரிவின் கீழ் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
செலிங்கோ லைஃவ் விற்பனை நிர்வாகப் பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் H.A.S. சுரவீர ‘ஏனைய விற்பனை ஆதரவு - முகாமையாளர் மற்றும் அதற்கு மேல்’ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்தப் போட்டிப் பிரிவில் இந்த வகைப்படுத்தல் அறிமுகம் செய்யப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.
இந்த விருதுகள் பற்றி கருத்து வெளியிட்ட செலிங்கோ லைவ் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆர்.ரெங்கநாதன் “செயற்றிறன்கள் மீதான எமது தொடர்ச்சியான கவனம் அது போன்று ஆயுள் காப்புறுதி பிரிவில் நாம் தொடர்ந்து ஏற்றுள்ள தலைமைத்துவ நிலை போன்றன எமது விற்பனை துறை சார் நிபுணர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த ஒப்பிடமுடியாத அளப்பரிய வாய்ப்புகளை வழங்குகின்றன” என்றார்.
10 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
55 minute ago