Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 02 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வசீகரிக்கும், கவர்ச்சியான, புதுப்போலிவுடன் கூடிய நவநாகரிக ஆடை அணிகலன்களை ODEL தன்வசம் கொண்டுள்ளது. ஒரு நெரிசல் மிக்க நகர்ப்பகுதியில் ஹிமாலய சாரலில் சுற்றித்திரியும் ஒரு அனுபவத்தைத் தருவதாகவும், மலைச்சாரலில் உள்ள வண்ணங்களை தெரிந்து எடுக்கும் விதமாகவும், தனது செழுமை மிக்க பிரத்தியேக கலாச்சாரம் மற்றும் வடிவங்கள் மூலம் எதிர்பார்ப்புக்களை மிஞ்சி ஆத்மாவை பரவசப்படுத்தும் வகையிலும் இவை அமைந்துள்ளன.
ODEL நிறுவனத்தின் தாய் நிறுவனமான SOFTLOGIC HOLDINGS PLC நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவுப் பணிப்பாளர் டெசிரீ கருணாரட்ன குறிப்படும் போது “மக்கள் இப்போது உணர்வுபூர்வமான விடயங்களை எதிர்பார்க்கின்றார்கள். அமைதியையும் ஆறுதலையும் அடைவதற்கு இயற்கையோடு இணைய விரும்புகின்றனர். எமது இந்நிகழ்வின் கருப்பொருள் ‘ஹிமாலயம்’ உள்ளத்துக்கான ஒரு மந்திரப்பாதை, மேலும் இயற்கையோடும் அதன் வர்ணங்களோடும் அக்கலாச்சாரத்தோடும் மீள் இணைப்பதற்கான ஒரு தளம் என்பதாகும். மேலும் இவ்விடம் உணரவுபூர்மான, விடயங்களை தாங்கிய, இயற்கை எழில் பொங்கும் ஒரு தளமாகும்” எனக்குறிப்பிட்டார்.
இயற்கையோடு எம்மை மீள் இணைக்கக்கூடிய வசீகரமான வடிவமைப்பாளர்களான Gurung, Phillip Lim, Etro, Missoni மற்றும் Simone Rocha போன்றவவர்களின் வடிவமைப்புத் தொகுதியை உள்ளடக்கியதாக ODEL FALL COLLECTION காணப்படுகின்றது.
ODEL FALL COLLECTION இல் உள்ள ஆடை, அணிகலன்கள் இயற்கையைப் பிரதிபலிக்கக்கூடீய வண்ணங்களையும், பன்முகத்தன்மையையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவை பாரம்பரிய மரபுகளை பேணி வடிவமைக்கப்பட்ட வையாகவும் நெய்தல் அலங்காரங்களில் கவனம் செலுத்தி தயாரிக்கப்பட்ட கைவண்ணத்தின் புதிய அலைகளை உருவாக்கும் விதமாகவும் அமைந்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
24 minute ago
31 minute ago