2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

SLT-MOBITEL ‘BizLife’ பக்கேஜ்களினூடாக உதவி

S.Sekar   / 2023 ஏப்ரல் 10 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கு (MSMEs) புத்தாக்கமான ‘BizLife’ வழங்கி, அவற்றின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.

BizLife பக்கேஜ்களினூடாக, வியாபாரங்களுக்கு தமது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு அவசியமான சகல அம்சங்களையும் கொண்ட குரல்/டேட்டா தீர்வுகள் வழங்கப்படுகின்றது. BizLife இனால், செலவுச் சிக்கனமான தெரிவுகளை எதிர்நோக்கும் நிறுவனங்களுக்கு செலுத்தும் பணத்துக்கு சிறந்த பெறுமதியும் வழங்கப்பட்டு, சகாயமான விலையிடலின் பிரகாரம் அமைந்த தீர்வையும், அதிகரித்துச் செல்லும் டிஜிட்டல் பொருளாதாரத்தை அணுகுவதற்கு உதவியாகவும் அமைந்திருப்பதுடன், நிலைபேறான வளர்ச்சியை எய்தவும் ஏதுவாக அமைந்துள்ளது.

SLT-MOBITEL Enterprise இன் ஒப்பற்ற தொழில்நுட்பம், வளங்கள் மற்றும் தங்கியிருக்கும் சேவைகளுடன், Bizlife பக்கேஜ்கள் நான்கு விறுவிறுப்பான உள்ளம்சங்களான BizLife Mini, BizLife Mini Flash, BizLife Advance மற்றும் BizLife Advance Flash ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

சிறிய நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் நுண் வியாபாரங்களுக்கு முழு அளவிலான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கி, அவற்றுக்கு வெற்றிகரமான வகையில் வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவுவதற்காக வழங்கப்படும் BizLife Mini இல் 58GB anytime டேட்டா, Meet Light – ஒன்லைனில் பணியாற்றும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் 30 GB டேட்டா, Messenger/WhatsApp பக்கேஜ் ஆகியவற்றுடன், 50 GB storage உடன் இலவச டேட்டா, அன்லிமிடெட் குரல் அழைப்புகள், 3 சாதனங்களுக்கான Kaspersky இணையப் பாதுகாப்பு, 25 பங்குபற்றுநர்கள் வரை premier SLT-MOBITEL LYNKED Video conferencing இனூடாக வீடியோ அழைப்பு வசதி மற்றும் SLT-MOBITEL இன் பிரத்தியேகமான BIZ mail வசதி 5GB உடன் வழங்கப்படுகின்றது.

BizLife Mini Flash இல், Messenger மற்றும் WhatsApp பக்கேஜ் அடங்கியுள்ளதுடன், நாளொன்றுக்கு 5 GB அன்லிமிடெட் டேட்டா அணுகல் மற்றும் அன்லிமிடெட் ஒன்லைன் பணியாற்றல், இலவச டேட்டா உடன் 50 GB storage, அன்லிமிடெட் குரல் அழைப்புகள், 3 சாதனங்களுக்கான Kaspersky இணையப் பாதுகாப்பு, 25 பங்குபற்றுநர்கள் வரை premier SLT-MOBITEL LYNKED Video conferencing இனூடாக வீடியோ அழைப்பு வசதி மற்றும் SLT-MOBITEL இன் பிரத்தியேகமான BIZ mail வசதி 5GB உடன் வழங்கப்படுகின்றது. BizLife Mini மற்றும் BizLife Mini Flash ஆகியன மாதாந்தம் ரூ. 4500 எனும் கட்டணத்தில் வழங்கப்படுகின்றது.

பாரியளவு வியாபாரங்களுக்கு, SLT-MOBITEL Enterprise இனால் BizLife Advance வழங்கப்படுகின்றது. இதில் 155GB அடங்கலாக எனிடைம் டேட்டா வசதி வழங்கப்படுகின்றது. Meet Light – 30 GB அடங்கலாக ஒன்லைன் பணியாற்றல் வசதி, Messenger/WhatsApp பக்கேஜ், ஆகியவற்றுடன், இலவச டேட்டா வசதிகளுடன் 100 GB storage வசதியும் வழங்கப்படுகின்றது. அன்லிமிடெட் குரல் அழைப்புகள், 3 சாதனங்களுக்கான Kaspersky இணையப் பாதுகாப்பு, 1000MB பகிரப்பட்ட Web Hosting கட்டமைப்பு மற்றும் வசதிகள், இலவச DNS hosting வசதி, Web builder தெரிவு, Static IP மற்றும் SLT-MOBITEL LYNKED Video conferencing இனூடாக 50 பங்குபற்றுநர்கள் வரை வீடியோ அழைப்பு வசதி போன்றன வழங்கப்படுகின்றன.

BizLife Advance Flash இனால் வியாபாரங்களுக்கு நாளாந்தம் 10 GB அன்லிமிடெட் டேட்டா அணுகல் வசதி வழங்கப்படுவதுடன், இதில் Messenger/WhatsApp பக்கேஜ் அடங்கியுள்ளது, 100 GB storage க்கு மேலதிகமாக அன்லிமிடெட் ஒன்லைன் பணியாற்றல், அன்லிமிடெட் குரல் அழைப்புகள், 3 சாதனங்களுக்கான Kaspersky இணையப் பாதுகாப்பு, 1000MB பகிரப்பட்ட Web Hosting கட்டமைப்பு மற்றும் வசதிகள், இலவச DNS hosting வசதி, Web builder தெரிவு, Static IP மற்றும் SLT-MOBITEL LYNKED Video conferencing இனூடாக 50 பங்குபற்றுநர்கள் வரை வீடியோ அழைப்பு வசதி போன்றன வழங்கப்படுகின்றன.  BizLife Advance மற்றும் BizLife Advance Flash ஆகியவற்றை மாதாந்தம் ரூ. 10,000 எனும் கவர்ச்சிகரமான கட்டணத்தில் பெற்றுக் கொள்ளலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .