2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

SLT-MOBITEL mTunes இனால் ’Be a Millionaire’ ஊக்குவிப்புத் திட்டம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 20 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறை அனுபவங்களை பெற்றுக் கொடுப்பதற்காக SLT-MOBITEL இனால் mTunes இல் பாவனையாளர்களுக்கு தனது புதிய 'Be a Millionaire' ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக பணப் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

வாடிக்கையாளர்களுக்கு தமக்கு பிடித்த பாடலை அல்லது ஓடியோ உள்ளம்சத்தை, தமது Caller Ring Back Tone (CRBT) ஐ மாற்றியமைத்துக் கொள்வதற்கு அனுமதிக்கும் டிஜிட்டல் வாழ்க்கைமுறை சேவையாக mTunes அமைந்துள்ளது. அழைப்புகளை மேற்கொள்கையில் பிரத்தியேகத்தன்மையை வழங்குவதாக அமைந்திருப்பதுடன், தமது அன்புக்குரியவர்களுடன் தமது தெரிவை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.

mTunes கட்டமைப்பில் பெருவாரியான பாடல் தெரிவுகள் காணப்படும் நிலையில், ‘Be a Millionaire’ ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக பாவனையாளர்களுக்கு தமக்கு விரும்பிய பாடல்களை கேட்டு மகிழ்வதுடன், பெருமளவு பணப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை பெற்றுக் கொள்ளவும் முடியும். 2023 செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை, mTunes களில் 'Be a Millionaire' ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக பங்குபற்றும் அதிர்ஷ்டசாலிகளுக்கு சிறந்த பரிசுகள் வழங்கப்படும். மாபெரும் இறுதிப் பரிசாக ஒரு மில்லியன் பரிசுத் தொகை (ரூ. 1,000,000) வழங்கப்படும். இரண்டாம் வெற்றியாளருக்கு ரூ. 100,000 மற்றும் மூன்றாம் வெற்றியாளருக்கு ரூ. 50,000 தொகை வழங்கப்படும். மேலும் ஏழு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு தலா ரூ. 10,000 வீதம் வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு வாரமும், மொத்தமாக பன்னிரண்டு வெற்றியாளர்கள் ரூ. 10,000 பணப் பரிசுக்காக தெரி செய்யப்படுவார்கள்.

இந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் பங்கேற்பது இலகுவானது. ஏற்கனவே காணப்படும் மற்றும் புதிய CRBT பாவனையாளர்களுக்கு இந்த பெறுமதி வாய்ந்த பரிசுகளை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும், இவற்றில் மில்லியனர்களாக திகழும் வாய்ப்பும் அடங்கியுள்ளது. ஊக்குவிப்பு காலப்பகுதியில் அதிகளவு mTunes களை செயற்படுத்திக் கொள்வதனூடாக இதற்கான வாய்ப்புகளைப் பெற முடியும். பல்வேறு பணப் பரிசுத் தெரிவுகள் காணப்படுவதுடன், ஒவ்வொரு வாரமும் வெற்றியீட்டுவதற்கான பல்வேறு வாய்ப்புகளும் காணப்படுகின்றன. கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக 'Be a Millionaire' ஊக்குவிப்புத் திட்டம் அமைந்துள்ளது.

தினசரி mTunes களை செயற்படுத்திக் கொள்வதனூடாக தமது வெற்றி வாய்ப்புகளை பாவனையாளர்கள் அதிகரித்துக் கொள்ள முடியும். mTunes இனால் வழங்கப்படும் விநோத, விறுவிறுப்பு மற்றும் களிப்பூட்டும் அனுபவங்களை பாவனையாளர்கள் பெற்று, இசை உலகை ரசிக்க முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X