Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
S.Sekar / 2022 டிசெம்பர் 02 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
குரல் மற்றும் டேட்டா பாவனைக்கு சிறந்த பெறுமதியை வழங்கும் வகையில், கவர்ச்சிகரமான பெறுமதி வழங்கலை முன்னெடுப்பதாக SLT-MOBITEL அறிவித்துள்ளது. இலங்கையின் வேகமான மொபைல் வலையமைப்புடன் மீண்டும் இணைந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்காக இந்த சலுகைகளை வழங்க SLT-MOBITEL முன்வந்துள்ளது.
SLT-MOBITEL உடன் தமது SIM அட்டையை மீளச் செயற்படுத்தி மீண்டும் இணையும் வாடிக்கையாளர்களுக்கு, விசேட குரல் மற்றும் டேட்டா பக்கேஜ் போன்றன வழங்கப்படும் என்பதுடன், எந்தவொரு வலையமைப்புக்கும் 3 மாத காலப்பகுதிக்கு UNLIMITED அழைப்புகள், மாதமொன்றுக்கு தலா 10GB anytime டேட்டா வீதம் 3 மாதங்களுக்கும் வழங்கப்படும்.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு, நாட்டில் பரந்தளவு வலையமைப்பை கொண்ட வேகமான வலையமைப்புடன் இணைந்து கொள்வதனூடாக பெருமளவு சௌகரியங்களையும் அனுபவிக்க முடியும். SLT-Mobitel மொபைலினால், பரந்தளவு குரல் மற்றும் டேட்டா பக்கேஜ்கள் வழங்கப்படுகின்றன. work & play, social media plans, special voice packages அல்லது TIKTOK & Instagram போன்றவற்றுக்கான விசேட திட்டங்கள் போன்ற அனைத்துக்கும் விசேட பக்கேஜ்கள் வழங்கப்படுவதுடன், தமது தேவைகளைப் பொறுத்து அவற்றை தெரிவு செய்து கொள்ளும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.
SLT-Mobitel வலையமைப்புடன் மீள இணைய எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் 1717 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அல்லது அருகாமையிலுள்ள எந்தவொரு SLT-MOBITEL கிளைக்கும் விஜயம் செய்து இலகுவாக மேற்கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago