Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மனைநில வர்த்தகத்தின் பாதையை மாற்றியமைத்து, சொகுசு மற்றும் சௌகர்யத்தை அடிப்படைப் பண்பாக கொண்டு செயற்படும் Trillium குழுமம் கொழும்பின் உயர் மாடிமனை பரப்பின் விரிவாக்கக் கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதான தமது திட்டங்களை அறிவித்துள்ளது.
திட்டமிடப்பட்டுள்ள குறித்த இந்தச் செயற்றிட்டங்களில் ஹவ்லொக் டவுன் கொழும்பு 05இல் அமையவுள்ள சுப்பர் சொகுசு மாடிமனைகள், டொரிங்டன் அவினியு, கொழும்பு 07 இல் அமையவுள்ள 40 அறைகளை கொண்ட நிறைவேற்று சேவை மாடிமனைகள் (Executive Service Apartment) மற்றும் குழுமத்துக்கான 40,000 சதுர அடிப்பரப்பு கொண்ட நவீன அலுவலக இடம் மற்றும் 2016ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நுகேகொடையில் ஆரம்பிக்கப்பட்ட இருபது தொகுதிகள் கொண்ட மாடிமனைகள் ஆகியனவும் அடங்கும்.
இந்தச் செயற்றிட்டங்கள் Trillium குழுமம் மற்றும் City Housing & Real Estate கம்பனி பிஎல்சி ஆகியவற்றினை ஒன்றிணைந்த ஒரே குடை ஸ்தாபனத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.
தசாப்த காலங்கள் நிறைந்த அனுபவத்தினையும், 1984ஆம் ஆண்டு ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை தொடரும் பயணத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட திறன்கள் ஊடாகவும் தமக்கென ஒரு தனியிடத்தை பிடித்தவாறு, மிகச்சிறந்த வீட்டுமனை செயற்றிட்டங்களை தமது உறுதிமொழியின் பிரகாரம் வார்த்தை பிசகாது Trillium Group அமைத்துக்கொடுக்கின்றது. 'நாம் எமது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை ஹைட் பார்க் ரெசிடென்சீஸ் உடன் ஆரம்பித்தோம். தொடர்ந்து பார்ன்ஸ் பிளேஸ் ரெசிடென்சீஸ், ஈடன் கார்டன், லோட்டஸ் க்ரோவ், த வில்லா, சன்ச்சுவரி மற்றும் எமது சிறப்புநிலை செயற்றிட்டமான கொழும்பு 08இல் அமைந்துள்ள Trillium ரெசிடென்சீஸ் என எம் பயணம் தொடர்கின்றது' என Trillium குழும தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
22 minute ago
27 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
46 minute ago