Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் எப்பகுதியிலிருந்தும் உங்கள் நண்பர்களுடன் இலகுவாக Viber ஊடாகத் தொடர்பு கொள்ள முடியும் என்பதுடன், சமூகங்களுடன் எந்தவொரு மொழியிலும் இணைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இதில் காணப்படும் முக்கிய பிரச்சினையாக, வேறு மொழிகளில் பதியப்படும் தகவல்களை நீங்கள் எவ்வாறு இலகுவாக புரிந்து கொள்வது என்பது அமைந்துள்ளது.
முன்னர் நீங்கள், செய்தி ஒன்றை உங்களுக்கு புரியாத மொழியில் பெற்றுக் கொண்டால், அதை ‘கொப்பி’ செய்து, மொழிபெயர்ப்பு app ஒன்றில் ‘பேஸ்ட்’ செய்து, அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. இதனூடாகச் செய்தியைப் புரிந்து கொண்டு, பதிலளிப்பதற்கு நீண்ட நேரத்தை எடுத்ததுடன், நீண்ட செய்முறைகளையும் வழங்கியிருந்தது. இதன்போது உரையாடல், வேறு திசைக்கு மாறியிருக்கவும் கூடும்; உரையாடலின் முக்கிய பகுதிகளை நீங்கள் தவறவிட்டிருக்கவும் கூடும்.
எந்தவொரு மொழியிலும் chat வசதியை சுமூகமானதாகக் கொண்டிருப்பதற்கு Viber இல் புதிய in-chat மொழிபெயர்ப்பு வசதியை அறிமுகம் செய்துள்ளது. எந்தவோர் உரையாடலையும் தற்போது எந்தவொரு மொழியிலும் உடனடியாக மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.
உங்கள் Viber app இல் செய்திகள் சுயமாக மொழி பெயர்ப்புச் செய்யக்கூடிய வகையில், மாற்றிக் கொள்ளலாம். வேறொரு மொழியில் உங்களுக்கு செய்தியை பார்வையிட வேண்டுமாயின், அதையும் இலகுவாக மாற்றிக் கொள்ளலாம். செய்தியை நீண்ட நேரம் அழுத்தியிருந்து, மொழியைத் தெரிவு செய்து, மொழிபெயர்ப்பைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். எந்தவொரு நேரத்திலும் மொழி பெயர்ப்பை மாற்றிக் கொள்ளலாம் என்பதுடன், Settings இல் மொழியை விரும்பியவாறு மாற்றிக் கொள்ளலாம்.
Viber இல் மொழி பெயர்ப்புகளுக்கு, கூகுள் மொழிபெயர்ப்பு வசதியால் வலுவூட்டப்படுகிறது. இந்த உள்ளம்சம் உலகளாவிய ரீதியில் காணப்படும் Viber பாவனையாளர்களுக்கு வழங்கப்படுவதுடன், அன்ட்ரொயிட் தொலைபேசியில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், iPhone பாவனையாளர்களுக்கு விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
1 hours ago