2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

"நேர்ச்சர்ஸ் சீக்ரட்ஸ் ஆய்வு விருது 2012"

A.P.Mathan   / 2013 மே 03 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முதல்தர மூலிகை அழகுசாதன விருதான "நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்" பொருட்களை உற்பத்தி செய்கின்ற நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம், இலங்கையர்களாலும் முடியும் என்ற திடமான நம்பிக்கையுடன் தேசிய கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு அனுசரணைகளை வழங்குகின்ற ஒரு தேசிய நிறுவனமாகும். தேசிய ரீதியில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதே "நேச்சர்ஸ் சீக்கரட்ஸி"ன் பிரதான செயற்பாடாக அமைந்துள்ளது.

இந்த இலக்கினை முன்னிட்டு, 2020ஆம் ஆண்டளவில் இலங்கையில் உருவாகின்ற சர்வதேச அழகுசாதனத்திற்கான நாமமாக "நேச்சர் சீக்கரட்ஸை" மாற்றுவதற்கான எதிர்கால சிந்தனையுடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய தற்போது 50இற்கும் அதிகமான நாடுகளில் "நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்" நாமத்தின் உரிமையை இலங்கை கொண்டுள்ளதுடன், 20 இற்கும் அதிகமான ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன. வர்த்தக நோக்கத்திற்கு அப்பால் சென்று, நிறுவன ரீதியான சமூக நலன்புரி திட்டங்கள் பலவற்றின் ஊடாகவும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு "நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்" பங்களிப்பு செய்து வருகின்றது.

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான விஞ்ஞானிகள் உருவாகின்ற போதிலும், நாடு என்ற ரீதியில் மொத்த தேசிய உற்பத்திக்காக செலவிடும் தொகை மிக சொற்பமானதும், போதுமற்றதும் ஆகும் என்று அரசாங்கத்திற்கும், சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் "நேச்சர் சீக்ரட்ஸ்" தெளிவுபடுத்தியுள்ளது. மூலிகை ஆய்வு நிலையத்தை தன்னகத்தே கொண்டுள்ள "நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்" நிறுவனம், அதற்கப்பால், உள்ளூர் விஞ்ஞானிகளை, நாட்டிற்கு மிகவும் பயனளிக்கும் வகையிலான ஆய்வுகளில் (Applied Research) ஈடுபடுத்தும் நோக்கில், வர்த்தகத்துறையில் சிறந்த, நடைமுறை ரீதியாக தேசிய கைத்தொழிலாளர்களால் சந்தைக்கு விநியோகிக்கக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் வகையிலான ஆய்வுகளை நிறைவுசெய்த பல்கலைக்கழக ஆய்வுக் குழுக்களுக்கு 2,50,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பரிசு மற்றும் "நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் ஆய்வுக்கான விருது" (Nature's Secrets Research Award - for the best Commercially viable Research) ஆகியவற்றை வருடாந்தம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான சமந்த குமாரசிங்க, பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீட பட்டதாரியாகையால், இந்த விருதினை அந்த விஞ்ஞான பீடத்தில் முன்னெடுக்கப்படும் ஆய்வுகளுக்காக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டிருந்து இந்த விருதை வழங்குவதற்கு "நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்" இணங்கியுள்ள போதிலும், 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்காக விருது பெறுவதற்கு தகுதியுடைய ஆய்வுக் குழுக்கள் பேராதனை பல்கலைக்கழகத்தினால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கவில்லை.
"நேர்ச்சர்ஸ் சீக்ரட்ஸ் ஆய்வுக்கான விருது" பெறுவதற்காக ஆய்வுக் குழுவொன்றை தெரிவுசெய்யும் நடவடிக்கைகளில், நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் எந்தவித தலையீடும் மேற்கொள்வதில்லை என்பதுடன், பல்கலைக்கழக நிர்வாகக் குழுவினால் பின்பற்றப்படும் வழிமுறைகளின் பிரகாரமே தெரிவு மேற்கொள்ளப்படுகின்றது.

•    பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தரால் ஆய்வை மேற்கொள்ளும் குழு நியமிக்கப்படுவதுடன், விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி, பட்டபின் படிப்பு கல்வி நிறுவனப் பணிப்பாளர் மற்றும் மேலும் சில உறுப்பினர்கள் அந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
•    அந்த ஆய்வுக் குழுவிற்கு, பேராசிரியர் / கலாநிதி ஒருவர் அல்லது இருவர் மற்றும் பட்டபின் படிப்பு பிரதிநிதி ஒருவர் அல்லது இன்னும் சிலர் தெரிவுசெய்யப்படவேண்டும்.
•    விருது வழங்குவதற்குரிய வருடத்திற்குள் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது ஆய்வுகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
•    ஆய்வு நடவடிக்கைகள் பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திலேயே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், அந்த ஆய்வின் மூலமான கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரத்தை இலங்கையின் கைத்தொழிலாளர் ஒருவர் வழங்குவது கட்டாயமாகும்.
•    இந்த விருதுக்குரிய ரொக்கப் பரிசு தொகையான 2,50,000 ரூபா பல்கலைக்கழகத்தின் ஊடாக நேரடியாகவே ஆய்வுக் குழுவிற்கு பெற்றுக்கொடுக்கப்படும்.
•    சம்பந்தப்பட்ட வருடத்திற்குள் விருதினை வழங்குவதற்கு என உரிய தகுதியைக் கொண்டுள்ள ஆய்வு மேற்கொள்ளப்படாத பட்சத்தில், ரொக்கப் பரிசை அதற்கடுத்த வருடத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு கவனம் செலுத்தப்படும். இதன் பிரகாரம் அடுத்த வருடத்தில் இரண்டு ஆய்வுகளுக்குரிய விருதினை வழங்குவதற்கான இயலுமை காணப்படும்.

பளுதூக்கல் விளையாட்டின்போது இடம்பெறும் தவறுகளை அடையாளம் காணக்கூடிய, குறைந்த செலவில் தயாரிக்கக்கூடிய நவீன தொழிநுட்ப வழிமுறையொன்றை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றே இம்முறை "நேர்ச்சர்ஸ் சீக்ரட்ஸ் ஆய்வு விருது 2012" க்காக பேராதனை பல்கலைக்கழகத்தினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு காரணமாக பலுதூக்கல் விளையாட்டில் ஈடுபட்டுள்ள இலங்கை வீர வீராங்கனைகள் தத்தமது குறைபாடுகளை சீரமைத்துக்கொண்டு சர்வதேச போட்டிகளில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாவதாக அந்த ஆய்வுக் குழுவின் தலைமை ஆய்வாளரான திருமதி. கலாநிதி யூ.ஏ.ஜே. பிணிதியஆராச்சி தெரிவிக்கின்றார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட தேசிய ஆய்வுப் பேரவையின் தலைவரான பேராசிரியர் எரிக் கருணாநாயக்கவினால் "நேச்சர் சீக்ரட்ஸ் ஆய்வு விருது 2012" வழங்கப்பட்டதுடன், விசேட விருந்தினராக பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்னவினால் ஆய்வுக் குழுவின் மூன்று உறுப்பினர்களுக்கும் சான்றிதழ்கள் கையளிக்கப்பட்டன. ரொக்கப் பரிசான 2,50,000 ரூபா, நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான சமந்த குமாரசிங்கவினால் ஆய்வுக் குழுவின் தலைமை ஆய்வாளராக செயற்பட்ட கலாநிதி யூ.ஏ.ஜே. பிணிதியஆராச்சியிடம்  கையளிக்கப்பட்டது.

பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பராக்ரம கருணாரத்ன, இலங்கை பலுதூக்கல் சங்கத்தின் பிரதம செயலாளர் பூர்ண கஹின்கல, நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலிகை ஆய்வு நிலையத்தின் தலைவர் கலாநிதி ரஞ்ஜலா ரத்னாயக்க மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டபின் படிப்பு பட்டதாரியான நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பிரதி பொதுமுகாமையாளர் (தொழிற்சாலை) நாலக்க குணவர்தன உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஐரோப்பிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட GMP, சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ISO 9001 மற்றும் ISO 14001 ஆகிய தரச்சான்றிதழ்களின் கீழ் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒரே தேசிய அழகுசாதன வர்த்தக நாமம் "நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்" ஆகும். அதிசிறந்த நவீன தொழிநுட்ப வசதியுடைய தொழிற்சாலையில், தொன்றுதொட்டு வருகின்ற மூலிகைத் தாவரங்களின் குணநலன்களை நவீன அழகுசாதன தொழிநுட்பத்துடன் கலந்து, சர்வதேச தரத்திலான அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த தொழிற்சாலை வளாகத்தை சூழ மூலிகைத் தாவரங்கள் மற்றும் செடிகள் அடங்கிய பூங்காவொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு 500 க்கும் அதிகமான பல்வேறு அரிய வகையான மூலிகைத் தாவரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மூலிகைத் தாவரங்கள் தொடர்பான ஆய்வு மற்றும் அவற்றின் அபிவிருத்தி குறித்த ஆய்வினை ஊக்குவிப்பதற்காக மூலிகை ஆய்வு நிலையமொன்றை ஆரம்பித்துள்ள முதலாவது தனியார் நிறுவனமாகவும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் திகழ்கின்றது. அரிதான மற்றும் பெறுமதியான மூலிகைத் தாவர வகைகளை வளர்த்து மக்களிடையே பகிர்ந்தளிப்பதுடன், எதிர்கால சந்ததியினருக்காக அவற்றை பாதுகாப்பதனையும் நோக்காகக்கொண்டு நவீன திசு வளர்ப்பு பண்ணையொன்றும் (Tissue Culture Lab) "நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்"  தொழிற்சாலை வளாகத்திற்குள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .