2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

SLT குழுமத்தின் 9 மாதங்களுக்கான செயற்பாட்டு இலாபம் ரூ.5 பில்லியனாக அதிகரிப்பு

A.P.Mathan   / 2012 நவம்பர் 30 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஒருங்கிணைக்கப்பட்ட தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கா டெலிகொம், 16 சதவீத வருடாவருட வளர்ச்சியுடன் (YoY),  ரூ. 5.01 பில்லியன் குழும செயற்பாட்டு இலாபத்தை பதிவுசெய்தவாறு, 2012ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களுக்கான நிதி அறிக்கையினை வெளியிட்டுள்ளது. குழும இலாபமானது, 12 சதவீத வருடாவருட வளர்ச்சியுடன் (YoY), ரூ. 42.07 பில்லியனாக அதிகரித்தது. 2012ஆம் ஆண்டின் முதலாம் மற்றும் இரண்டாம் காலாண்டில், ரூபாய் மதிப்பு காரணமாக 2012ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அந்நியச் செலாவணி மீதான மாற்ற ஈட்டத்தினைத் தவிர்த்து நோக்குகையில், குழும செயற்பாட்டு இலாபங்களில், குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், நாணயப் பரிமாற்றம் மீதான திரள் நட்டமானது, வரிக்கு முந்தைய இலாபம் (PBT) மற்றும் வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) ஆகியவற்றினை வலுக்கரைத்துள்ளது. வழமையான அடிப்படையில்;, (நாணயப் பரிமாற்ற இழப்பு மாற்றம் இன்றி), குழுமமானது, வரிக்கு முந்தைய இலாபத்தின் அளவில் குறிப்பிடத்தக்க வகையில், 21 சதவீதத்துடன், ரூ. 5.76 பில்லியனையும், வரிக்குப்பிந்திய இலாபம், 26 சதவீதத்துடன் ரூ. 4.33 பில்லியன் என்ற வருடா வருட வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. வழமையாக்கப்பட்ட இந்த முடிவுகள், ஸ்ரீலங்கா டெலிகொமினை இலங்கையின் ஒருங்கிணைக்கப்பட்ட தொலைத்தொடர்பாடல் துறை முதல்வனாகவும், உருவாக்குனராகவும் மேலும் வெளிப்படுத்தியுள்ளது. எனினும், மொபிடல் குழுமத்தின் நாணயமாற்று பரிமாற்றத்தினால் ஏற்பட்ட நட்டமானது, வரிக்கு முந்தைய இலாபம் மற்றும் வரிக்குப் பிந்தைய இலாபத்தின் அளவினை முறையே 11 சதவீத மற்றும் 18 சதவீதத்துடன், ரூ. 4.3 பில்லியனாகவும், ரூ. 2.9 பில்லியனாகவும் குறைந்தது.

காலாண்டு முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த SLT குழும தலைவர் நிமால் வெல்கம, 2012ஆம் ஆண்டு செயற்பாட்டு இலாபங்களில் ஏற்பட்ட சீரான வளர்ச்சியானது, எமது குழுமத்திலுள்ள நிறுவனங்கள் வலுமிக்க முடிவுகளை அளிக்கும் வகையிலான எம் குழுமத்தின் வலிமை, மீள்திறன், சீரமைவு வளர்ச்சி வினைத்திறன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது. நாட்டில் தகவல் தொழிநுட்பத் தொழிற்துறையினை செயற்படுத்துவதற்கான ஊக்கியாக விளங்கும் நாம், எமது நாட்டினை தகவல் தொழிநுட்ப தொழிற்துறையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று, எமது பங்குதாரர்களுக்கு சிறந்த பெறுமதியை உருவாக்கி அளிக்கும் வகையில், வலைப்பின்னல்களை நவீனமயமாக்கல், கொள்திறன், வலையமைப்பு விரிவாக்கம் ஆகியவற்றை மேற்கொள்கிறோம்.

நிறுவன மட்டத்தில், கடந்த 9 மாதங்களுக்கான YTD வருமதி 7 சதவீதத்துடன், ரூ. 25.82 பில்லியனாக அதிகரித்தது. ஸ்ரீலங்கா டெலிகொம் கம்பனியின் வரிக்கு முந்தைய மற்றும் பிந்திய இலாபம் முறையே 2 சதவீத மற்றும் 3 சதவீதத்துடன், ரூ. 3.69 பில்லியன், ரூ. 2.7 பில்லியன் ஆகியவற்றினால் அதிகரித்தது. வருவாய் வழிமுறைகளான நிலையான புரோட்பாண்ட், PEO TV, மொத்த விற்பனை, தொழில் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நடவடிக்கைகள் ஆகியன வருமான வளர்ச்சிக்கான ஊக்கிகளாக விளங்கின. உலகளாவிய ரீதியில், நிலையான இணைப்பு வாடிக்கையாளர்களின் போக்கு வீழ்ச்சியடைந்து வருவதற்கு மாறாக, ஸ்ரீலங்கா டெலிகொம்மின் பரந்த பொருட்கள் மற்றும் சேவைப் பரம்பலும், அதிதுரித, தடையற்ற புரோட்பாண்ட் சேவைக்கான கேள்வியும், PEO TV ஊடான இடையறாத பொழுதுபோக்கும், நிலையான இணைப்பு வாடிக்கையாளர்களில் சீரானவளர்ச்சியை 6 சதவீதத்துடன் 985இ752 ஆக வருடாவருடம் கண்டுள்ளதுடன், 1 மில்லியன் மெகாலைன் வாடிக்கையாளர்கள் என்ற மைல்கல்லை நோக்கி நடைபோடுகின்றது.

நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பினைத் தவிர்த்து, சர்வதேச தொலைத்தொடர்பாடல் வரி விதிப்பனவுகள் மற்றும் சக்திச் செலவுகள் ஆகியன, செயற்பாட்டுச் செலவீனத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பினை ஏற்படுத்திமையானது, இலாப வளர்ச்சியில் தாகத்தினை உண்டாக்கியது.

நிறுவனத்தின் கையடக்கத் தொலைபேசி இணைப்புப் பிரிவான மொபிடெல், குறித்த தொழிற்துறையில் நிலவும் பலமான போட்டியின் மத்தியிலும், தொடர்ச்சியான இலாபத்தைப் பெற்றுள்ளது. கடந்த வருடத்தின், குறித்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2012ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களுக்கான வருவாய், 14 சதவீதத்துடன் ரூ. 18.2 பில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த வருவாய் அதிகரிப்பானது, மொபிடல் வாடிக்கையாளர் தளத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகவே இடம்பெற்றது. 2012ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பூர்த்தியடைந்த ஆறாவது கட்ட விரிவாக்கல் செயற்திட்டப் பணிகளின்முடிவில் நிகழ்ந்த வலையமைப்பு கொள்திறன் மற்றும் வலைப்பின்னல் முழுமையாக்கம் அகியன, மிகச் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தினை அனைவருக்கும் வழங்கியது.

எதிர்கொண்ட ஏராளமான சவால்களைத் தவிர்த்து, மொபிடெல் வட்டி,வரி தேய்மானக் கழிப்பிற்கு முன்னதான வருவாய் (EBITDA) மற்றும் EBIT ஆகியவற்றின் வளர்ச்சிகள் முறையே குறித்த மதிப்பாய்வுக் காலப்பகுதியில் 20 சதவீத மற்றும் 30  சதவீதமாக உயர்ச்சியடைந்தது. இலாபக் குறிகாட்டிகளின் வளர்ச்சியானது, வருவாய் மீதான அதிகரிப்பு ஊடாகவும், செலவுகளை ஏற்றமைத்தல் மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாடு ஆகிய முனைப்புகளினாலும்; பெறப்பட்டது. குறித்த இந்த முனைப்புகள் எரிபொருள், மின்சாரம் மற்றும் ஏனைய உள்ளீட்டு விலைகளின் காரணமாக ஏற்பட்ட தளர்ந்த சவால்களைத் தவிர்த்து EBITDA மற்றும் EBITDA வரம்பெல்லைளின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்தது. நிறுவனமானது, கடந்த வருடத்தின் நேரொத்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன் 33 சதவீத கூடிய EBITDA என்ற வரம்பெல்லையை பதிவுசெய்தது. நாணயமாற்று பரிமாற்ற இழப்பு இன்றி, வரிக்கு முந்தைய இலாபமானது, மதிப்பாய்வுக் காலப்பகுதியில் 45 சதவீதம் என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவுசெய்தது.

மொபிட்டல் மூன்றாம் காலாண்டுப் பகுதியில், ரூபாயில் ஏற்பட்ட விளிம்பு நிலை மதிப்புயர்வுடன் இணைந்து வரிக்கு பிந்திய இலாபமாக 1 பில்லியன் என்ற குறிப்பிடத்தக்க வருவாயினைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக, நிறுவனமானது முதலாவது அரையாண்டில் நாணயப் பரிமாற்ற வீதத்தினால் ஏற்பட்ட நட்டத்தினை இல்லாதொழிப்பதற்கு முடிந்தது.

SLT குழுமத்தின் பிரசுர வெளியீட்டு பிரிவு, ரூ. 461 மில்லியன் என்ற வருவாயை பதிவுசெய்ததுடன், வரிக்கு முந்தைய மற்றும் பிந்தைய இலாபங்களாக முறையே ரூ.243 மற்றும் ரூ.175 ஆகியனவற்றை ஈட்டியது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .