Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 10 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களுக்கு தனது உற்பத்திகளையும், சேவைகளையும் இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை மும்முரமாக Huaw ei முன்னெடுத்து வருகின்றது. இம் மூலோபாயத்தை இலக்காகக் கொண்டு, தனது விஸ்தரிப்பு முயற்சிகளின் ஒரு கட்டமாக, அண்மையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அநுராதபுரம் நகரில் புதிய பிராந்திய அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளது.
இலங்கையில் Huaw ei சாதனங்களுக்கான தலைமை அதிகாரியான ஹென்றி லியு கூறுகையில், “எமது மும்முரமான விஸ்தரிப்பு நடவடிக்கைகள் தொடர்பான எமது இலக்கில் மற்றுமொரு படி முன்னேறியுள்ளமையையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்வதுடன், அநுராதபுரத்தில் உள்ள மக்கள் எமது சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற எமது முயற்சி சிறந்த பலனைத் தருமென நம்புகின்றோம்.
விஸ்தரிப்பில் வளர்ச்சி காண்பது மட்டுமன்றி, முற்றிலும் புதிய வகையிலான, புத்தாக்கம்மிக்க உயர் தர திறன்பேசிகளை அறிமுகப்படுத்துவதையும் Huaw ei எதிர்பார்த்துள்ளது. எமது வாடிக்கையாளர்களுக்கு வாடிக்கையாளர் சேவை மட்டத்தை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு இப்புதிய பிராந்திய அலுவலகம் செயற்படும்.”
2016 ஆம் ஆண்டில் கணிசமான வளர்ச்சியை Huaw ei எதிர்பார்த்துள்ளதுடன், அது கடந்த ஆண்டிலும் ஈடிணையற்ற சாதனைகளைப் படைத்திருந்தது. GFK இன் புள்ளிவிபரங்களுக்கு அமைவாக இலங்கையில் 2016 ஆண்டின் 3ஆவது காலாண்டில் 24.4மூ சந்தைப் பங்கினை Huaw ei பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், நாட்டில் 2ஆம் இடத்தில் திகழ்ந்து வருகின்ற திறன்பேசி வர்த்தகநாமம் என்ற தனது ஸ்தானத்தை மேலும் விரைவுபடுத்தி வருகின்றது. Brand Financதரப்படுத்திலின் பிரகாரம் 2016ஆம் ஆண்டில், உலகில் மிகவும் பெறுமதிகொண்ட 100 வர்த்தகநாமங்களில் ஒன்றாக Huaw ei மீண்டும் பெயரிடப்பட்டுள்ளதுடன், அது 47ஆவது ஸ்தானத்தில் நிரற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது
55 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
3 hours ago