Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மாணவ, மாணவியருக்கான மடிக்கணினிகளை அன்பளிப்புச் செய்யும் ‘சுஹுரு’ சமூகப் பொதுப்பணியை, அபான்ஸ் குழுமம், 6ஆவது முறையாகவும் மிகச் சிறந்த முறையில் நிறைவு செய்தது.
தனது கல்வியை மிகவும் சிறப்பாக மேற்கொள்வதற்கான தேவைகளைக் கொண்ட மாணவ மாணவியரில், பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய மாணவ மாணவிகளைத் தேர்ந்தெடுத்தே, இந்த மடிக்கணினிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
“நாளைய இலங்கையில், தொழில்நுட்பத்துடன் கூடிய கல்விச் செயற்பாடுகளில் தமது திறமைகளை நிரூபிப்பதற்கு, மாணவ மாணவிகளுக்கு இது மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதே, அனைவரதும் நம்பிக்கையாகும். தற்காலத்து நவீன உலகில், அறிவாற்றல் மிக்க மாணவர்களை உருவாக்கக்கூடிய அம்சங்களையும் கருவிகளையும் மாணவர்களிடம் கையளித்து, இலங்கைக் கல்வி நிலையின் தரத்தை உயர்த்துவதற்கான பங்களிப்பை வழங்குவதே, அபான்ஸ் குழுமத்தின் பொறுப்பு என்பதை உணர்ந்து, இவ்வாறான சமூக பொதுநலப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது” என, பொது முகாமையாளர் சத்துர ஜயவர்தன தெரிவித்தார்.
நாட்டின் முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கக்கூடிய திறனும், திறமையான எண்ணங்களை உடைய சாமர்த்தியமான மாணவ மாணவிகள், நாடளாவிய ரீதியில் பல ஆயிரம் பேர் உள்ளனர்.
இவ்வாறானவர்களின் திறமைகளை, சரியான வழிக்காட்டுதலின் கீழ் பயன்படுத்துவதற்கான உடைமைகள் மற்றும் நிதியியல் வளத்தின் குறைபாடுகள், பாரிய தடையாகவுள்ளன. இந்நிலையை நன்றாக உணர்ந்த அபான்ஸ் வியாபாரக் குழுமப் பணிபாளர்கள் சபை, ‘சுஹுரு’ சமூகப் பொதுப்பணியின் மூலம், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவ மாணவியரின் கணினித் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கி வருகிறது. மேலும், நாளைய தலைவர்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமுமாகும்.
இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில், குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களின் மாணவ, மாணவிகளில், 14 - 21 வயதுக்கு இடைப்பட்ட மாணவ மாணவியரின் கல்வி நிலைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான கணினி தேவைகளை எமக்கு எழுதி அனுப்புங்கள் என, முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீளக் கிடைக்கப்பெற்ற பதில் கடிதங்களை நன்றாக ஆராய்ந்து, விண்ணப்பதாரிகளில் கணினியின் அத்தியாவசியம் அதிகமாகவுள்ள மாணவர்களுக்கு ‘சுஹுரு’ சமூகப் பொதுப்பணி மூலம் கணினி அன்பளிப்பு செய்யப்பட்டு வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
28 minute ago
31 minute ago