Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2016 பெப்ரவரி 26 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மக்களுக்கான வரலாற்றுப் புகழ் மிக்க தனது சேவையின் இன்னொரு மைல்கல்லை கொமர்ஷல் வங்கி எட்டியுள்ளது. இலங்கையில் அதன் 250வது கிளை அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு-09 டொக்டர் டெனிஸ்டர் டி சில்வா மாவத்தையில் உள்ள ஒரியன் சிற்றி கட்டிடத் தொகுதியில் இந்தக் கிளை திறந்து வைக்கப்பட்டது. வாடிக்கையாளர் வசதிகளையும் சேவைகளையும் மேம்படுத்துவதற்காக அதி நவீன தொழில்நுட்பங்களைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் சுற்றாடலுக்கு இசைவான வங்கித் திட்டத்தை ஊக்குவித்தல் ஆகிய எண்ணக்கருக்களின் கீழ் இந்தக் கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய கிளையை வங்கியின் தலைவர் தர்மா தீரரத்ன சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.
கொழும்பு-07 வார்ட் பிளேஸில் வங்கி ஏற்கனவே நிறுவியுள்ள தன்னியக்க வங்கிச் சேவை மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதிய கிளை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நேரடி பண வைப்புக்கள், வங்கிக் கணக்கு திறப்பதற்கான மற்றும் கடன் பெறுவதற்கான வேண்டுகோள் அனுப்பல், காசோலை வைப்பீடு, இணைய வங்கி சேவைகளுக்கான வசதிகள், நிதி பரிமாற்றங்கள், பணம் மீளப் பெறல், பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் கிளைகள் தொடர்பான அறிமுக சேவை, வட்டி வீதம் தொடர்பான அறிவுறுத்தல்கள் என நாள் முழுவதும் பல சேவைகளை இங்கு பெற முடியும்.
வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ஏனைய வசதிகளை வழங்க இரண்டு ஊழியர்களும் இங்கு நிலை கொண்டிருப்பர்.
'47 வருடங்களுக்கு முன் கொமர்ஷல் வங்கி அதன் முதலாவது கிளையை கலேவலை நிறுவியது. அன்று முதல் நினைத்துப் பார்க்க கூட முடியாத அளவுக்கு அது வளர்ச்சி கண்டுள்ளது' என்று கூறினார் அதன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம். 'வர்த்தக வளர்ச்சிக்குத் தேவையான உயர் சிந்தனைகள், செயற்பாடுகள், தொழில்நுட்பங்கள் மற்றும் வாடிக்கையாளர் தேவைகள் என்பனவற்றில் நாம் மிக உறுதியான அர்ப்பணத்தை தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும் அதேவேளை வங்கி முறையையும் முற்றாக மாற்றி அமைத்துள்ளோம். மேலும் எமது சேவைகளை மக்களுக்கு வழங்கும் விடயத்தில் நாம் வாழும் இந்தக் கிரகமானது தொடர்ச்சியான மாற்றங்களை வேண்டி நிற்கின்றது' என்று அவர் மேலும் கூறினார்.
24 மணிநேர அதிவேக பாதுகாப்பான இணையத்தள தொடர்பினால் வலுவூட்டப்பட்ட கொமர்ஷல் வங்கியின் தன்னியக்க கிளைகள், சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு கணக்குகளைத் திறத்தல், இணைய வங்கிச் சேவைக்கான அனுகுமுறை, கடன் அட்டை மீதி கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான வழிமுறை, ATM வழியாக வைப்பீடு மற்றும் மீளப் பெறல் என பல முழு அளவிலான சேவைகளை வழங்குகின்றது. வாடிக்கையாளர் கணக்குகளைத் திறக்கின்ற போது தேவையான ஆவணங்களைப் பூர்த்தி செய்தல்; அவற்றை சரிபார்ப்பதற்காக ஒரு கொமர்ஷல் வங்கி கிளைக்கு விஜயம் செய்தல், பணத்தை மீளப் பெற ஆவணங்களை சுமந்து செல்லல் என்பனவற்றுக்கான கால நேரத்தை இது மீதப்படுத்துகின்றது.
வங்கியின் காகித பாவனையற்ற வைப்பு இயந்திர முறையானது வைப்பு பற்றுச் சீட்டுக்களின் தேவை மற்றும் கடித உறை தேவை என்பனவற்றை முற்றாக நீக்குகின்றது. ஒரே நேரத்தில் எந்த வகையான பெறுமதியையும் கொண்ட 200 நாணயத்தாள்களை எண்ணி ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் இந்த இயந்திரங்களுக்கு உள்ளது. இந்த வகையில் தமது சேமிப்பு அல்லது நடைமுறை கணக்கில் ஒரு நேரத்தில் ஒரு வாடிக்கையாளர் இரண்டு லட்சம் ரூபாய்களை இந்த இயந்திரங்கள் மூலம் வைப்பில் இடலாம். 24 மணிநேரமும் இந்த சேவை கிடைக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது. இதே இயந்திரம் மூலம் கொமர்ஷல் வங்கியின் கடன் அட்டை மீதிகளையும் செலுத்தலாம்.
வாடிக்கையாளர்களை பாரம்பரியமான வங்கித் தளத்தில் இருந்து அதிநவீன டிஜிட்டல் முறையிலான கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்தள வங்கிச் சேவைகளுக்கு கொண்டு சென்றதன் மூலம் கொமர்ஷல் வங்கி கணிசமான அளவுக்கு காகித பாவனையை குறைத்துள்ளது. சக்தி சேமிப்பு, சக்தி வள பாவனை கட்டுப்பாடு, பொறுப்பான வாகனத் தொடர் முகாமைத்துவம், பொறுப்பான கழிவகற்றல் மற்றும் மீள் சுற்று முறைகள், பொறுப்பான தண்ணீர் நுகர்வு, ஓஸோன் படலத்தை பாதிக்கக் கூடிய பொருள்களின் பாவனையை நீக்கல் மற்றும் கிளைகள் அமைந்துள்ள இடங்களில் உயிர் பல்லினத்தன்மையை பாதுகாத்தல் என்பன மூலம் காபன் பதிவுகளைக் கணிசமாகக் குறைத்து கொமர்ஷல் வங்கி சுற்றாடல் பாதுகாப்போடு தொடர்புடைய பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
காபன் பதிவுகளைக் குறைக்கும் மேலதிக நடவடிக்கையாக சகல கிளைகளையும் சூரிய சக்தி கொண்ட கிளைகளாக மாற்றும் நடவடிக்கைகளையும் வங்கி மேற்கொண்டுள்ளது.
கடந்த இரண்டரை தசாப்த காலத்தில் கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் அதன் பௌதிக ரீதியான இருப்பை விஸ்தரித்து வந்துள்ளது. அதன் 50வது கிளை தம்புள்ளையிலும், 100வது கிளை கதுருவலையிலும், 150வது கிளை மஹியங்கனையிலும், 200வது கிளை கதிர்காமத்திலும் திறந்து வைக்கப்பட்டன.
ஐந்து வருடங்களாக தொடர்ந்து உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம்பிடித்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கியான கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 625 ATM வலையமைப்புக்களுடன் செயற்படுகின்றது. நாட்டில் தனியொரு வங்கி கொண்டுள்ள மிக விசாலமான இலத்திரனியல் பணப்பரிமாற்ற சேவை இதுவாகும். 2014ம் ஆண்டில் மிகச் சிறந்த தனியார் வர்த்தக முத்திரையாகவும் அது தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொமர்ஷல் வங்கி ஏனைய பல சர்வதேச சஞ்சிகைகள் மூலமாகவும் கடந்த பல ஆண்டுகளில் இலங்கையின் தலைசிறந்த வங்கி என தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு; 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில்; இலங்கையின் மிகச் சிறந்த பத்து கூட்டாண்மை பிரஜைகளில் ஒன்றாகவும் இலங்கை வர்த்தகச் சபையால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 18 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. 2015 செப்டம்பரில் மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை முழு அளவில் திறப்பதற்கான உரிய அங்கீகாரத்தையும் வங்கி பெற்றுள்ளது. அண்மையில் முழு அளவிலான பணப்பரிமாற்ற சேவைகளை மேற்கொள்ள இத்தாலியிலும் கொமர்ஷல் வங்கி அனுமதியைப் பெற்றுள்ளது.
31 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago